Ethirneechal Marimuthu: எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து மாரடைப்பால் இன்று மரணம் அடைந்திருக்கும் நிலையில் இந்த தகவல் ஒட்டுமொத்த திரையுலகினார்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் வாழ்த்தி உள்ளது. எனவே சமூக வலைதளங்களில் அவர் பேட்டிகள் குறித்த தகவல்களும் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து இன்ஜினியரிங் படித்து வந்த நிலையில் படிப்பு செட் ஆகாத காரணத்தினால் சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்தார். அங்கு சாலை ஓரங்களில் தங்கி வந்த இவர் பிறகு ஹோட்டலில் வேலை பார்க்க தொடங்கினார். மிகவும் கஷ்டமாக இருந்தாலும் வேலை செய்து கொண்டே இயக்குனருக்கான படிப்பை படித்து முடித்தார்.
இவ்வாறு படித்து முடித்தவுடன் தொடர்ந்து எஸ்.ஜே சூர்யா, வசந்த், மணிரத்தினம், சீமான் ஆகியோர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றினார். இதனை அடுத்து கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற திரைப்படங்களை இயக்கினார் ஆனால் சொல்லும் அளவிற்கு இந்த படங்கள் வெற்றி பெறாத காரணத்தினால் நடிப்பில் ஆர்வம் காண்பித்தார்.
அந்த வகையில் தற்பொழுது வரையிலும் 20 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் மாரிமுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த சீரியல் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
இவ்வாறு பிரபலமான மாரிமுத்து பேட்டி ஒன்றில், நான் தேனியில் இருந்து சென்னைக்கு வந்த போது ஒரு விடுதியில் தங்கியிருந்தேன் அங்கிருந்தபடியே ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கி வேலை தேடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது என்னிடம் காசு இல்லாத நேரத்தில் என் நண்பர்களிடம் கேட்டு பெற்றுக் கொள்வேன்.
ஒரு முறை தீபாவளி பண்டிகை வந்தது என் அறையில் இருந்தவர்கள் அனைவரும் ஊருக்கு சென்றனர் ஊருக்கு போக கூட காசு இல்லாத நிலையில் அறையிலேயே தங்கி விட்டேன். இதனை அடுத்து பசித்தது வழக்கம் போல அக்கவுண்ட் வைத்து சாப்பிடும் ஹோட்டலுக்கு போனேன் அங்கு ஒரு பெரிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது உடனே ஹோட்டலில் சாப்பிடலாம் என இருந்த என்னிடம் காசு இல்லை சரி மற்ற அறைகளில் இருக்கும் நண்பர்களிடம் வாங்கிக் கொள்ளலாம் என போனேன் அவர்களது அறைகளிலும் பூட்டு இருந்தது.
என்னைத் தவிர எல்லாருமே தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு சென்று விட்டார்கள் பசி வயிற்றைக் கிள்ளியது என்ன செய்வது என்று தெரியவில்லை அறையில் ஏதாவது உணவு இருக்கிறதா என பார்த்தேன். ஒன்றுமே இல்லை அங்கு ஒரு ஊறுகாய் பாட்டில் மட்டுமே இருந்தது ஆபத்துக்கு பாவம் இல்லை என கருதி ஊர் காயை நக்குவது, அதன் காரத்தை குறைக்க ஒரு கிளாஸ் குடிப்பது இப்படி மூன்று வேலையும் மூன்று நாட்கள் செய்தேன்.
பிறகு நான்காவது நாள் எனக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்தேன் அதற்குள் அறைக்கும் நண்பர்கள் வந்து விட்டார்கள் அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர் பிறகு அங்கு குளுக்கோஸ் ஏற்றினார்கள் என்று மாரிமுத்து கூறியிருந்தார்.