Ethirneechal Marimuthu: மறைந்த நடிகர் மாரிமுத்து குறித்த ஏராளமான தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் தற்பொழுது கடவுள் மறுப்பாளராக எப்படி மாரிமுத்து வாழ்ந்துள்ளார் என்பது குறித்து பார்க்கலாம். சன் டிவியின் டாப் சீரியலான எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
இவர் தனது நிஜ வாழ்க்கையில் கடவுள் மறுப்பாளராக வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் ஜோதிடர்களுக்கு எதிராகவும் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. அப்படி பேட்டி ஒன்றில் அப்போ உங்க வீட்டில் ஒரு சாமி போட்டோ இருக்கே என கேள்வி எழுப்ப அதற்கு தனது பானியில் பதில் அளித்து ரசிகர்களை வியக்க வைத்தார்.
மாரிமுத்து பல கஷ்டங்களுக்கு பிறகு தான் சினிமாவில் சாதித்தார் அப்படி சென்னைக்கு ஓடிவந்த மாரிமுத்து பல நாட்களில் உணவு கூட இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். பிறகு ஹோட்டல் ஒன்றில் வெயிட்டராக வேலை பார்த்து ரொம்பவே கஷ்டப்பட்டு எப்படியாவது தனது லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காக வேலை செய்து கொண்டே இயக்குனராக படித்து நடிக்க தொடங்கினார்.
அப்படி எஸ்.ஜே.சூர்யா, வசந்த் உள்ளிட்ட இன்னும் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரிமுத்து கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கினார் இந்த படங்களும் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறாத காரணத்தினால் பிறகு நடிப்பில் இறங்கினார்.
இயக்குனர் மிஷ்கின் தான் நடிக்க கூறி யுத்தம் செய் படத்தில் நடிக்க வைத்தார். இதனைத் தொடர்ந்து 20ம் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் மாரிமுத்து சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று புகழின் உச்சத்திற்கு சென்றார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும் கமலின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பொதுவாக மாரிமுத்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர். எனவே பேட்டி ஒன்றில், மாரிமுத்துவின் மனைவி பாக்கியலட்சுமி எல்லா தெய்வங்களையும் வழிபடக்கூடியவர்.
ஆனால் மாரிமுத்துவை போலவே அவரது இரு குழந்தைகளும் கடவுள் மறுப்பாளர்கலாகவே மாறிவிட்டனர் என்று கூறினார். அப்போ வீட்டில் ஒரு சாமி படம் இருக்கு என தொகுப்பாளர் கேட்க அது என் குலதெய்வம் செந்தடி அய்யனார். அது என் தாத்தா.. குலதெய்வம் கோவிலுக்கு வருஷா வருஷம் குடும்பத்தோட போயிட்டு வருவேன் என கூறி இருந்தார்.