Actor G.Marimuthu: இயக்குனரும், நடிகருமான மாரிமுத்துவின் மறைவு திரைவுலகிர்களையும், ரசிகர்களையும் பேர் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எதிர்நீச்சல் சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மாரிமுத்து இன்று மாரடைப்பு காரணமாக காலமானார்.
வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து வந்த மாரிமுத்து அதன் பிறகு ராஜ்காரனிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்து வந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர்கள் வசந்த், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பலரிடமும் உதவி இயக்குனராகப் பணியாற்றி வந்த மாரிமுத்து ஒரு கட்டத்தில் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற திரைப்படங்களை இயக்க தொடங்கினார்.
இவ்வாறு திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் இந்த படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறாத காரணத்தினால் நடிப்பதை தொடர்ந்தார். அப்படி மாறி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் இவருடைய கேரக்டர் பாராட்டப்பட்டது.
இந்த சூழலில் தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் என்ட்ரி கொடுத்தார் இதில் ‘ஏய் என்னம்மா’ என்ற வசனத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர். இவ்வாறு பல வருடங்கள் போராடியும் கிடைக்காத புகழ் எதிர்நீச்சல் சீரியலின் மூலம் இவருக்கு கிடைத்தது.
அப்படி தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்து வந்த நிலையில் இன்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்து உயிரிழந்தார். மாரிமுத்து எஸ்.ஜே சூர்யாவிற்கு இடையே நட்பு ஏற்பட முக்கியமான காரணம் ஆசை திரைப்படம் தான்.
இவ்வாறு அஜித் நடிப்பில் ஆசை திரைப்படம் 1995ஆம் ஆண்டு வெளியானது இதனை வசந்தியக்க இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவும், மாரிமுத்துவும் உதவி இயக்குனராக வேலை பார்த்தனர். அதிலிருந்து எஸ்.ஜே சூர்யா, மாரிமுத்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அப்படி 1995 செப்டம்பர் 8ம் தேதி ஆசை திரைப்படம் வெளியான நிலையில் இன்று 28 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. அதே நாளில் படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்த மாரிமுத்து என்று உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.