Marimuthu upcoming movie : வெள்ளி திரையில் ஹீரோவாகவும், இயக்குனராகவும் வெற்றி கண்ட மாரிமுத்து சின்ன திரையில் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியலில் பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தாலும் மாரிமுத்துவின் கதாபாத்திரம் தான் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ஒரு வெற்றியை பெற்று தந்தது என கூறலாம் ..
இவர் நடித்து வந்த குணசேகரன் கதாபாத்திரம் செம்ம வெயிட்டான கதாபாத்திரம் அதாவது குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் ஒரு ஆளாக இருந்தார். பெண்களை அவர் எதிர்த்து பேசுவது, அவர்கள் சொல்வதை காதில் வாங்காமல் மதிக்காமல் அந்த பெண்களையே ஏய என்னமா என பேசுவது என மாஸ் காட்டுவார். அது தான் சீரியலுக்கே ஹைலைடாக இருந்தது.
அதுமட்டுமிலம் இவர் சொல்லும் டயலாக்கை பார்க்கவே பல ரசிகர்கள் கூட இந்த சீரியலை பார்த்தனர் இந்த சீரியல் மூலம் பெரிய அளவில் பிரபலமடைந்த இவருக்கு வெள்ளித்திரையில் டாப் நடிகர்களுடன் வாய்ப்பும் கிடைத்தது அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனுக்கே ஆலோசனை சொல்லும்..
ஒரு ஆளாக இவர் நடித்த அதனைத் தொடர்ந்து இவரது கைவசம் சூர்யாவின் கங்குவா, கமலின் இந்தியன் 2 போன்ற படங்களிலும் நடித்து வந்தார் இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் இன்று அதிகாலை டப்பிங் முடித்துவிட்டு காரில் வரும் போது மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இறந்த செய்தி தற்போது சினிமா உலகத்தையே சோகத்தில் அழுத்தியுள்ளது.
பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்து வருகின்றனர் வர முடியாதவர்கள் தொடர் பக்கத்தில் மாரிமுத்துவின் புகைப்படம் மற்றும் வீடியோவை ஷேர் செய்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மாரிமுத்து ஜெயிலர் படத்திற்கு பிறகு சூர்யாவின் கங்குவா, கமலின் இந்தியன் 2 போன்ற படங்களிலும் நடித்து உள்ளார்.