ஏய் நானும் இருக்காம்மா. பிக்பாஸுக்கு ஆஃபர் கொடுத்த மாரிமுத்து – கதறப்போகும் போட்டியாளர்கள்

Marimuthu
Marimuthu

Marimuthu : வெள்ளித்திரையில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் மாரிமுத்து. இவர் இயக்குனராகவும், நடிகராகவும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார். அண்மையில் கூட ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனுக்கு அட்வைஸ் சொல்லும் ஒரு ஆளாக இவர் நடித்திருப்பார்.

அதனைத் தொடர்ந்து மாரிமுத்துவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது. வெள்ளித் திரையில் இப்படி ஓடிக்கொண்டிருக்கும் மாரிமுத்து சின்ன திரையில் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவரை அந்த சீரியலில் பார்க்கவே ஒவ்வொரு குரூப் இருக்கிறது. இப்படி சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் மாரிமுத்து.  சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது ரசிகை நீங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றால் எப்படி நடந்து கொள்வீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த மாரிமுத்து பிக் பாஸ் என்பது ஒரு பெரிய பிளாட்பார்ம் அதில் கலந்து கொண்டால் உலகம் முழுவதும் பிரபலமாகலாம். ஆனால் இப்பொழுது நான் ஒரு நீண்ட பிராஜெக்ட்டில் இருக்கிறேன் அந்த சீரியலை விட்டு எங்கேயும் நகர முடியாது ஒருவேளை பிக் பாஸ் வீட்டிற்கு போனால் வீட்டை இரண்டாகாமல் விடமாட்டேன் ஒரு உலுக்கு உலுக்கி விட்டு தான் வருவேன்.

மேலும் நான் இந்த சீசனில் போனால் பிக் பாஸ் வரலாற்றிலேயே இந்த சீசன் தான் முதலிடத்தில் இருக்கும் என கூறினார். இந்த பேட்டியை விஜய் டிவி பார்த்தால் கண்டிப்பாக இவருக்கு மிகப்பெரிய ஒரு ஆப்பரை கொடுத்து இவரை தூக்க முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..