பல திறமை வெளிபடுவர்கள் எந்த காலத்தில் வேண்டுமானாலும் பிழைத்துக் கொள்வார்கள் இது சினிமாவிற்கும் பொருந்தும் அந்த வகையில் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வெற்றி கண்டவர் மாரிமுத்து. இவர் முதலில் அஜித் நடிப்பில் உருவான “வாலி” திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்து இவர் ஒரு கட்டத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்தார் அப்படி 2008 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் கண்ணும் கண்ணும் இந்த படம் அப்பொழுது வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது படத்தில் பிரசன்னா ஹீரோவாக நடித்திருந்தார்.
மேலும் உதயதாரா, வடிவேலு, விஜயகுமார், சந்தானம் என பலர் நடித்து அசத்தி இருந்தனர் இந்த படத்தில் மாரிமுத்தும் குண்ச்சத்திர கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை தொடர்ந்து “புலிவால்” என்னும் படத்தை எடுத்திருந்தார்.
இந்த படத்தில் பிரசன்னா, விமல், அனன்யா, ஓவியா, சூரி, தம்பி ராமையா, சிங்கமுத்து பலர் நடித்திருந்தனர் 2 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் அப்பொழுது 10 கோடி கலெக்ஷன் அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்திற்கு பிறகு அவர் இயக்குனராக எந்த ஒரு படத்தையும் இயக்கவில்லை என்றாலும் தற்பொழுது சின்னத்திரை, வெள்ளிதிரையில் பிரபலமடைந்து வருகிறார்.
குறிப்பாக சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர் அந்த சீரியலில் “ஏய் என்னம்மா” என்று சொல்லும் வசனம் தற்பொழுது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இப்படி மீடியா உலகில் பல திறமைகளை வளர்த்துக் கொண்டு கொடி கட்டி பறந்து வருகிறார் மாரிமுத்து.