எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க 3 கண்டிஷன் போட்ட மாரிமுத்து.!

thiruchelvam
thiruchelvam

Ethirneechal : நடிகர் மாரிமுத்து நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரின் மரணம் சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் எதிர்நீச்சல் தொடரில் நடிப்பதற்காக மாரிமுத்து போட்டா மூன்று கண்டிஷன்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

56 வயது மதிக்கத்தக்க மாரிமுத்து தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர். இவர் நேற்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். எதிர்நீச்சல் சீரியல் டப்பிங் அதிகாலையில் பேசிக்கொண்டிருந்தார் அவருக்கு திடீரென நெஞ்சில் ஏதோ ஒரு புதுவிதமான வித்தியாசத்தை அறிந்த அவர் டப்பிங் பேசுவதை நிறுத்திவிட்டு வெளியே ஓடி காரை எடுத்துள்ளார் ஹாஸ்பிடலுக்கு செல்ல. தன்னிச்சையாக காரை ஓட்டி சென்ற  மாரிமுத்து காரை விட்டு இறங்கும் பொழுது சரிந்து விழுந்துள்ளார்.

பின்பு அவரை செக்கப் செய்த மருத்துவர்கள் நெஞ்சு வலி மாரடைப்பு  காரணமாக தான் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்கள் அவரின் மறைவு சினிமா உலகினரை பெரும் அதிர்ச்சி கொள்ளாக்கியது அதுமட்டுமில்லாமல் பல சினிமா பிரபலங்கள் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மாரிமுத்து அவர்கள் தமிழில் ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ளார் ஆனால் அந்த திரைப்படங்கள் மூலம் அவர் பிரபலமாகவில்லை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த எதிர்நீச்சல் சீரியல் மூலம் தான் பேரும் புகழும் பெற்று ஒரு நல்ல நிலைமைக்கு வந்தார்.

ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் தான் மாரிமுத்து நடித்து வந்தார் அந்த கதாபாத்திரத்தில் ஏய் இந்த அம்மா ஜனனி என்று சொல்லும் டயலாக் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது, இந்த தொடருக்காக டப்பிங் பேசும்போது தான் அவர் உயிர் பிரிந்துள்ளது சமீப காலமாக சமூக வலைத்தளத்தை திறந்தாலே மாரிமுத்து தான் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார் இவர் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கு முன்பே மூன்று கண்டிஷன்கள் போட்டு உள்ளார் இயக்குனர் திரு செல்வத்திடம்.

மாரிமுத்து சில மாதங்களாகவே பல நேர்காணலில் கலந்து கொண்டு வந்தார் அப்பொழுது எதிர்நீச்சல் தொடரில் நடைபெறுவதற்கு தான் கண்டிஷன் போட்டதை கூறியிருந்தார் எதிர்நீச்சல் தொடர் கிட்டத்தட்ட நாலு முதல் ஐந்து வருடங்கள் வரை போகும் என்பதால் மாதம் 12 முதல் 15 நாட்கள் கால் ஷீட் தர வேண்டுமென இயக்குனர் திருசெல்வம் தன்னிடம் கேட்டதாக மாரிமுத்து கூறினார் அதுமட்டுமில்லாமல் நம்முடைய கதாபாத்திரம் மிக முக்கியமானது என்பதால் வசனங்களை பார்த்து பார்த்து அப்படியே பேச மாட்டேன் எனக் கூறியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் சினிமாவில் வாங்கும் சம்பளத்தை விட இதில் சம்பளம் அதிகம் வேண்டுமெனவும் கேட்டிருந்தாராம் தனது நிபந்தனைகளை திருச்செல்வத்திடம் கூறியவுடன் அவரும் ஓகே சொன்னதால் பிறகு தான் முழுமூச்சாக சின்னத்திரையில் நடித்து வருவதாகவும் அவர் சமீபத்தில்நடைபெற்ற நேர்காணலில் கூறினார். எதிர்நீச்சல் தொடரின் தூணாக இருக்கும் மாரிமுத்து இன்று இல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு வேதனை அளித்துள்ளது.

இதுவரை எதிர்நீச்சல் சீரியல் 500 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டுள்ளது அதில் கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட எபிசோடுகளில் மாரிமுத்து நடித்துள்ளார் இவர் ஒரு எபிசோடில் வரவில்லை என்றாலும் அந்த சீரியல் சுவாரஸ்யம் குறைந்துவிடும் ஆனால் சில எபிசோடுகளில் அவருக்கு நெஞ்சு வலி வருவது போல் காட்சிகள் எதிர்நீச்சல் தொடரில் இருந்தது ஆனால் இப்பொழுது உண்மையாலுமே நெஞ்சு வலி ஏற்பட்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.