Ethirneechal marimuthu : நடிகர் மாரிமுத்து சினிமாவில் வாலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு, உதயா, கண்ணும் கண்ணும், யுத்தம் செய், பைரவா, வீர சிவாஜி, கொடி, இனிமே, சண்டக்கோழி 2 என பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் இவர் எத்தனையோ திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.
சன் தொலைக்காட்சிகளில் நெடுந்தொடராக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் இந்த சீரியலை கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வன் தான் எதிர்நீச்சல் சீரியலையும் இயக்கியுள்ளார் அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் திருச்செல்வம் நடித்துள்ளார்.
அதாவது குணசேகரனை எதிர்க்கும் கதாபாத்திரமான ஜீவானந்தம் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார். எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து அவர்களுக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது அது மட்டும் இல்லாமல் தனக்கென ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியல் டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் பொழுது குணசேகரன் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
அதனால் எதுவும் சொல்ல முடியாமல் அவசர அவசரமாக காரை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு செல்ல முயற்சி செய்து உள்ளார் அது மட்டும் இல்லாமல் அந்த சமயத்தில் தன்னுடைய மகளுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு குணசேகரன் என்கின்ற மாரிமுத்து மரணம் அடைந்துள்ளார் இந்த தகவல் தற்பொழுது தான் தெரியவந்துள்ளது. மாரிமுத்துவின் உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது . இந்த நிலையில் பல சினிமா பிரபலங்கள் மாரிமுத்துவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவுக்கு வில்லனாகவும் ஜீவானந்தத்திற்கு வில்லனாகவும் மருமகளை டார்ச்சர் செய்யும் கதாபாத்திரத்திலும் நடித்து வந்த குணசேகரனின் உடலைக் காண எதிர்நீச்சல் சீரியல் குழு ஓடோடி வந்துள்ளது. மாரிமுத்துவின் உடலை பார்த்து அப்பத்தா கண்ணீரில் மிதக்கிறார் அது மட்டும் இல்லாமல் ஜீவானந்தமாக நடித்து வரும் திருச்செல்வமும் எதுவும் சொல்ல முடியாமல் வருத்தத்துடன் நிற்கிறார்.
ஏனென்றால் திருச்செல்வன் தான் எதிர்நீச்சல் சீரியலை இயக்கியுள்ளார் அவரின் முழு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் மாரிமுத்து திடீரென இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இனி எதிர்நீச்சலின் சீரியல் நிலைமை என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.