Ethirneechal Marimuthu : எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து நேற்று உயிரிழந்ததை தொடர்ந்து பல பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் ஆனால் சில ஜோதிடர்களும் ஜோதிடத்தை நம்புபவர்களும் சமூக வலைதளத்தில் மிகவும் மோசமாக பதிவிட்டு வருகிறார்கள்.
ஒரு மனிதன் பிறக்கும் நேரத்தையும் இறக்கும் நேரத்தையும் யாராலும் கணிக்க முடியாது அதேபோல் தடுக்கவும் முடியாது. அது நம் கையில் இல்லை இந்த நிலையில் மாரிமுத்து மரணத்தை வைத்து மோசமாக பதிவிடுவது பலருக்கும் கோபத்தை வரவழைத்துள்ளது. நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் நேற்று இறந்துள்ளார் அவரின் மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் அவருடைய நடிப்பு திறமையையும் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தார் என்பதையும் நடிகர்கள் சக நண்பர்கள் என பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு சில மனிதர்களும் ஜோசியக்காரர்களும் ஜோசியத்தை நம்பும் மனிதர்களும் மாரிமுத்து இறப்புக்கு மோசமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜோதிடத்தை நம்புபவர்கள் நம்பாதவர்கள் என்ற நிகழ்ச்சி வெளியானது இதில் ஜோதிடர்களை மாரிமுத்து அவர்கள் வெளுத்து வாங்கினார் ஜோதிடம் ஜாதகம் பார்ப்பவர்கள் மன்னிக்க முடியாத குற்றவாளிகள் என விலாசி தள்ளினார்.
அதுமட்டுமில்லாமல் ரஜினி பிறந்த அதே நாளில் 57 ஆயிரம் பேர் பிறந்ததாகவும் ஆனால் அனைவரும் சூப்பர் ஸ்டார் ஆக ஏன் மாற முடியவில்லை ரஜினி மட்டும் தான் சூப்பர் ஸ்டார் ஏனென்றால் அவர் கடுமையான உழைப்பால் தான் இந்த இடத்திற்கு வந்தார் அதற்கும் ஜாதகத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என மாரிமுத்து பேசி இருந்தார் இதற்கு ஜோசியக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இதன் நிலையில் இவரது மறைவை ஜோதிடர்கள் ஜோதிட ஆதரவாளர்கள் ஜோதிடர்களையும், ஜோதிடத்தையும் ஒழிக்க நினைத்தவர் ஒழிந்தாராமே என பதிவிட்டுள்ளார்கள். பாஸ்கர் என்ற ட்விட்டர் வாசி போன வாரம் தான் இந்து மத கடவுளுக்கும் கோட்பாடுகளுக்கும் எதிராக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் காரசமாக பேசினார் ஆனால் இன்று அகால மரணம் அடைந்தார் என எழுதியதற்கு மாரிமுத்து ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் கவிதா லட்சுமி என்ற ஒருவர் ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை இல்லை என்றால் அமைதியாக காப்பதே நல்லது ஜோதிடர்களை பகைத்துக் கொள்வது எவ்வளவு பெரிய பாவம் என்பது மரணத்தில் அறிகிறேன் என எழுதியுள்ளார் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா எப்படி ஒருவரின் மரணத்தில் கூட இப்படி கேவலமாக சொந்த பகையை தீர்த்துக் கொள்கிறீர்கள் என வெளுத்து வாங்குகிறார்கள்.
இதற்கிடையில் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் நடிகர் மாரிமுத்துவின் மரணம் அதிரச்சியளிக்கிறது சமீபத்தில் ஜோதிடம் பற்றி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டார் அவர் எதிரே அமர்ந்திருந்த 50க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் அவரது வருங்காலத்தை கணித்து சொல்கிறேன் என்று ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள் ஒருவர் கூட அவர் ஆயுள் முடியப் போகிறது என்பதை சொல்ல முடியவில்லை உங்கள் மரணத்தைக் கூட மூடநம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் ஆக்கி விட்டு சென்று இருக்கிறீர்கள் ஓய்வெடுங்க சார் எனக்கூறி விமர்சனம் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.