Marimuthu passed away : தமிழ் சினிமாவில் வாலி, உதயா, கண்ணும் கண்ணும், யுத்தம் செய், நிமிர்ந்து நில் என பல திரைப்படங்களில் நடித்த வந்தவர் மாரிமுத்து இவர் 1966 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பிறந்தவர் இவரின் மனைவி பாக்கியலட்சுமி இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்த மாரி முத்து பெரிதாக சினிமாவில் சாதிக்கவில்லை.
இவர் நடிகனாக மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். அந்த வகையில் மாரிமுத்து கண்ணும் கண்ணும், ஆசை புலிவால் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் ஆசை திரைப்படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக தான் பணியாற்றியுள்ளார். பிறகு சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் நெடுந்தொடரான எதிர்நீச்சல் சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்து போட்டு வைத்துள்ளார்.
தேனியை சேர்ந்த மாரிமுத்து ராஜ்கிரன் எஸ்.ஜே சூர்யாவுடன் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் இவர் சென்னையில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் டப்பிங் முடித்துவிட்டு சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு திரும்பும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டு காலமாகியுள்ளார் மாரிமுத்து.
இவர் கடைசியாக பரியேறும் பெருமாள், விக்ரம், ஜெயிலர் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் இவரின் நடிப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வரும் இந்த நேரத்தில் இப்படி ஒரு தகவல் வெளியாகி எதிர்நீச்சல் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாரிமுத்து சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் தற்பொழுது நடித்து வருகிறார் இவரின் கதாபாத்திரத்திற்காகவே எதிர்நீச்சல் சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது ஏனென்றால் பெண்களை அவமதிக்கும் கதாபாத்திரத்தில் தற்பொழுது இவர் நடித்து வருகிறார் இந்த நிலையில் தற்போது காலமானது எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது