‘ஜெயிலர்’ படம் குறித்து சன் டிவி எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்துவின் விமர்சனம்.!

jailer movie
jailer movie

Jailer Movie: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தினைப் பார்த்த ஏராளமான பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் பாராட்டி வருகின்றனர் அப்படி செலிப்ரிட்டி ஷோவில் பங்கேற்ற எதிர்நீச்சல் மாரிமுத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

அதாவது, நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த ஜெயிலர் படத்தில் தமன்னா, சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். சர்வதேச அளவில் வெளியான ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் இந்த படத்தின் சிறப்பு காட்சி தமிழகத்தில் காலை 9:00 மணிக்கு வெளியிடப்பட்டது. சமீப காலங்களாக ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது.

அந்த வகையில் விஜய்யின் பீஸ்ட் படத்தினை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்த படத்தின் மூலம் கலவை விமர்சனத்தை பெற்றார். மேலும் பல அவமானங்களையும் சந்தித்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்நிலையில் செலிபிரட்டி ஷோ நடத்தப்பட்டது.

அதில் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்களும் பங்கு பெற்றனர் இந்த படம் குறித்து தங்களது பாராட்டுக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ஜெயிலர் படத்தினை பார்த்த எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்து தனது பாராட்ட தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, நான் தலைவர் ரசிகர் அவருக்கு எல்லாரும் தான் ரசிகர்கள்.. உலகத்தில் ரஜினியை ரசிக்காமல் யாராலும் இருந்திருக்க முடியாது நான் கல்லூரியில் படிக்கும் பொழுதே ரிலீஸ் ஆகும் படங்களின் முதல் ஷோவை பார்த்து விடுவேன். முக்கியமாக மிஸ்டர் பரத், மாவீரன் படங்களை பார்த்து தான் ரஜினியின் ரசிகராக மாறியதாக மாரிமுத்து கூறியுள்ளார். மேலும் நன்றாக நடிக்கும் அனைவருக்கும் நான் ரசிகன் தான் என்றும் எனக்கு ரஜினி மட்டுமல்லாமல் கமலையும் மிகவும் அதிகமாக பிடிக்கும் என இவர் கூறியுள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.