இதை செய்திருந்தால் “மாரிமுத்துவை” காப்பாற்றி இருக்கலாம்.! டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்

G. Marimuthu Latest News
G. Marimuthu Latest News

G. Marimuthu : மாரிமுத்து அவர்கள் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் தான் வந்தார் முதலில் அசிஸ்டன்ட் இயக்குனராக பல படங்களில் பணியாற்றினார் ஒரு கட்டத்தில் இவருடைய திறமையை பார்த்த இயக்குனர்கள் உனக்கு நடிப்பு திறமை இருக்கு நீ சினிமாவில் நடித்தால் நன்றாக வரலாம் என கூறி உள்ளனர்.

இதை ஏற்று அவரும் வாலி, யுத்தம் செய், கொம்பன், திரிஷா இல்லனா நயன்தாரா, கொடி, வீரசிவாஜி, யாக்கை, நான் சிரித்தால், சுல்தான், ருத்ரதாண்டவம், டாக்டர், எனிமி, எம்ஜிஆர் மகன், மருது என பல படங்களில் நடித்தார் இப்படி ஓடினாலும், தான் இயக்குனராக ஆகவேண்டும் என்ற ஆசையையும் அவரை துரத்தியது ஒரு வழியாக கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கி தனது ஆசையை தீர்த்தார்.

அதனைத் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த இவர் கிடைக்கின்ற நல்ல வாய்ப்புகளையும் பயன்படுத்தினார் அந்த வகையில் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் கெஸ்ட்டாகவும், போட்டியாளராகவும் விளையாண்டு வந்த மாரிமுத்துக்கு 2022 ஆம் ஆண்டு எதிர்நீச்சல் சீரியலில் ஆதி முத்து குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதில் கனகச்சிதமாக பொருந்தி சூப்பராக நடித்து இல்லத்தரசிகள் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவரது மனதிலும் இடம் பிடித்தார் அந்த சீரியல் இன்று டாப்பில் இருக்க காரணமே குணசேகரன் என்கின்ற மாரிமுத்து தான்ம்..  நேற்று எதிர்நீச்சல் சீரியல் டப்பிங் கொடுக்க சென்று இருந்தார் அப்பொழுது மாரிமுத்துவுக்கு மூச்சு திணறல் ஏற்பட நான் வெளியே சென்று காத்து வாங்குகிறேன் என கூறியுள்ளார்.

வெளியே வந்த அவர் திடீரென காரை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.  அங்கிருந்த சக நடிகர்கள் மாரிமுத்துவை வெளியே வந்து தேடி உள்ளனர் காணவில்லை என்பதால் அவருடைய மகளுக்கு போன் செய்துள்ளனர் அப்பொழுதுதான் விஷயம் தெரிந்தது மாரிமுத்து இறந்துவிட்டார் என்று பிறகு  எதிர்நீச்சல் சீரியல் குழு, வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் ரசிகர்களின் அனைவரும் நேரில் சென்று பார்த்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் அவருக்கு கடைசி சிகிச்சை அளித்த மருத்துவர் கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது அவர் சொன்னது.. மாரிமுத்து அவர்கள் நெஞ்சு வலி ஏற்பட்டதும் அவரே காரை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார் நெஞ்சுவலி வரும் போது வேகமாக நடப்பது, ஓடுவது மற்றும் கார் ஓடுவது போன்ற வேலைகளை செய்யக்கூடாது அதனால் உடல் அதிகம் பதட்டமாகும் அவரே காரை ஒட்டி வராமல் வேறு யாராவது ஒட்டி அவர் அமைதியாக உட்கார்ந்து வந்திருந்தால் அவரைக் காப்பாற்றிருக்க வாய்ப்பு உண்டு என மருத்துவர் ஆனந்தகுமார் கூறியுள்ளார்.