கரிக்கட்டையால் வீட்டின் சுவற்றில் எழுதி வைத்துவிட்டு சென்ற மாரிமுத்து.! கண்ணீருடன் அவரது தாய் சொன்ன தகவல்..

Marimuthu
Marimuthu

G. Marimuthu Mother speak : மாரிமுத்து தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள சிங்கராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பசுமலைத்தேரி என்னும் கிராமத்தில் பிறந்தவர். இவர் திரையுலகில் பல்வேறு டாப் நடிகர்களின் படங்களில் நடித்து அசத்து இருந்தாலும் இயக்குனராக வேண்டும் என்பதுதான் கனவு ஒரு வழியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் தனது ஆசையையும் நிறைவேற்றினார் கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி அசத்தினார்.

இந்த படங்கள் நன்றாக இருந்தாலும் ரசிகர்கள் கொண்டாட தவறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தொடர்ந்து சில நடிப்பில் கவனம் செலுத்தினார். வெள்ளித்திரையும் தாண்டி  சின்னத்திரையிலும் வாய்ப்புகள் அதிகமாக குவிந்தது பல தொலைக்காட்சிகளில் போட்டியாளராகவும், கெஸ்ட் ஆகவும் என்ட்ரி கொடுத்து அசதினார்.

இந்த நிலையில் தான் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில்  குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தார் என்பதை விட வாழ்ந்தார் என்ற சொல்லலாம் அந்த அளவிற்கு அற்புதமாக நடித்து இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்தார்.

எதிர்நீச்சல் சீரியல் மூலம் பெரிய அளவு பிரபலமாகி டாப் நடிகர்களின் பட வைப்பை கைப்பற்றினார் அண்மையில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து சூர்யாவின் கங்குவா, கமலின் இந்தியன் 2 போன்ற நடித்து வந்தார். நேற்று எதிர்நீச்சல் சீரியலில் டப்பிங் பணிகளை தொடர்ந்தார் அப்பொழுது மூச்சு திணறல் ஏற்பட வெளியே வந்த அவர் திடீரென தனது காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து  எதிர்நீச்சல் சக நடிகர்கள் பேசும் பொழுது தான் அவர் இறந்துவிட்டதாக செய்தி வெளிவந்தது இதனை கேட்டு பலரும் நேரில் சென்று அழுது தீர்த்தனர்  சென்னையிலிருந்து அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு சென்று இறுதி சடங்குகள் நடைபெற இருக்கிறது இந்த நிலையில் மாரிமுத்துவின் மரணம் குறித்து அவருடைய அம்மா பேசுகையில்..

பத்தாம் வகுப்பு வரை தங்களது கிராமத்திற்கு அருகாமையில் படித்த மாரிமுத்து சிவகாசியில் டிப்ளமோ படிப்பை  இடை நிறுத்திவிட்டு சினிமாவிற்கு செல்ல வேண்டும் என வீட்டில் கூறியதால் தந்தைக்கும், மாரிமுத்துவிற்கும் கருது வேறுபாடு ஏற்பட்டதாகவும் பின்னர் கறிக்கட்டையால் வீட்டின் சுவரில் சினிமாவில் சாதித்தால் மட்டுமே ஊர் திரும்புவேன் என எழுதி வைத்துவிட்டு சென்று மூன்று ஆண்டுகள் கழித்து ஊர் திரும்பியதாக தாயார் கூறி உள்ளார்.