Marimuthu last minutes : ஹீரோ, ஹீரோயின்கள் போல நிகராக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் குணச்சிதர நடிகர்களையும் தூக்கி வைத்து ரசிகர்கள் கொண்டாடுகின்றனர் அந்த வகையில் வெள்ளித்திரையில் பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் மாரிமுத்து.
இவர் அஜித்தின் வாலி படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு விஜயின் பைரவா, விஷாலுடன் சண்டைக்கோழி 2, கார்த்தியின் சுல்தான், ஜெயம் ரவியின் பூமி, சிவகார்த்திகேயன் டாக்டர் என பல்வேறு டாப் நடிகரின் படங்களில் நடித்து தன்னை வளர்த்துக் கொண்டார் தொடர்ந்து சினிமாவில் ஓடிக்கொண்டிருந்தாலும் சின்ன திரையிலும் அதிகம் கவனம் செலுத்தினார்.
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார் இந்த கதாபாத்திரம் பெண்கள் என்று கூட பார்க்காமல் எதிர்த்து பேசுவது அவர்களுடன் மல்லு கட்டுவதுமாக இருக்கும் அதனாலயே என்னவோ குணசேகரன் கதாபாத்திரம் பெரிய அளவில் ரீச் ஆனது மேலும் இந்த சீரியல் டிஆர்பி யிலும் முன்னேறி முதலிடத்தை எல்லாம் பிடித்து மாஸ் காட்டியது.
இந்த நிலையில் மாரிமுத்து இன்று டஃபிங் முடித்துவிட்டு வெளிவரும் போது ஏற்பட்டு இயற்கை எழுதினார் என கூறப்பட்டது இந்த செய்தியை கேட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவின் கடைசியின் நிமிடங்கள் குறித்து செய்தி வெளிவந்துள்ளது.
அதாவது எதிர்நீச்சல் தொடருக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறி வெளியே சென்ற நடிகர் மாரிமுத்து தானே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார் பிறகு அவரின் மகளை தொடர்பு கொண்ட பொழுது தான் விவரம் தெரிந்தது என நடிகர் மாரிமுத்துவின் கடைசி நிமிடங்களை பகிர்ந்தார் நடிகர் கமலேஷ். இதைக் கேட்ட ரசிகர்கள் கண்கலங்கி அவருக்கு இப்படி ஒரு நிலையா எனக்கூறி கதறுகின்றனர்.
#JUSTIN | மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் மாரிமுத்துவின் இறுதி நிமிடங்கள்!#SunNews | #RIPMariMuthu | #MariMuthu pic.twitter.com/VSUexdhIjm
— Sun News (@sunnewstamil) September 8, 2023