Marimuthu directed movie : 1990 ஆம் ஆண்டு தேனியில் இருந்து வந்தவர் மாரிமுத்து இவரின் மனைவி பாக்கியலட்சுமி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் தான் தேனிக்கு வந்தார் அந்த வகையில் 1999 ஆம் ஆண்டு வாலி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக நடிப்பதற்கு ஆரம்பித்தார் அதனை தொடர்ந்து உதயா, கண்ணும் கண்ணும், யுத்தம் செய், நிமிர்ந்து நில் ஜீவா கொம்பன், திரிஷா இல்லனா நயன்தாரா, என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவர் வெறும் நடிகனாக மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார் அதற்கு முன்பு தமிழ் சினிமாவில் 80 90 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்து வந்த ராஜ்கிரன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் மாரிமுத்து அது மட்டுமில்லாமல் எஸ் ஜே சூர்யா அவர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றினார் இப்படி உதவி இயக்குனராக பணிவாற்றி வந்த மாரிமுத்து ஒரு காலகட்டத்தில் படத்தை இயக்க ரெடியானார்.
அந்த வகையில் மாரிமுத்து கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படத்தில் பிரசன்னா, உதயதாரா, வடிவேலு சந்தானம், விஜயகுமார், மையம் கோபி, என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள் இதனை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விமல் அவர்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தை இயக்கினார்.
புலிவால் திரைப்படத்தில் விமல் அவர்களுடன் இணைந்து பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள் ஆனால் இவர் இயக்கிய திரைப்படங்கள் பெரிதாக சினிமாவில் வெற்றி பெற வில்லை அதனால் மீண்டும் நடிப்பதற்கு ஆயத்தமானார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய விக்ரம், ஜெயிலர் ஆகிய திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்லவரவேர்ப்பை பெற்றுள்ளது இந்த திரைப்படங்கள் ரசிகர்களிடன் நல்ல விமர்சனங்களை பெற்றது இந்த நிலையில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் எதிர்நீச்சல் மாரிமுத்து திடீரென மரணமடைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இவர் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு தன்னுடைய டப்பிங் பணியை முடித்துவிட்டு திரும்பி உள்ளார் அப்பொழுது எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது பின்பு ஹாஸ்பிடலுக்கு செல்வதற்கு முன்பே இவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இவரின் இழப்பு எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.