Marimuthu condolence cinema celebrity : மீடியா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் மாரிமுத்து முதலில் இயக்குனராக வேண்டுமென்ற ஆசையில் தான் வந்தார் ஆனால் இவருக்கு முதலில் வெள்ளித்திரையில் நடிக்க தான் வாய்ப்பு கிடைத்தது எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான “வாலி” படத்தில் நடித்து அறிமுகமானார்.
முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்த வாய்ப்புகளை அள்ளினார் அந்த வகையில் யுத்தம் செய், கொம்பன், கொடி, பைரவா, களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் நடித்தார் இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் கடைசியாக தனது ஆசையையும் நிறைவேற்றினார் இயக்குனராக கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி வெள்ளித்திரையில் பிஸியாக ஓடினாலும் சின்னத்திரையிலும் கவனம் செலுத்தினார் அப்படி அண்மையில் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார். எதிர்நீச்சல் சீரியலில் இவர் பெண்களுக்கு எதிராக பேசினாலும் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்.
இவர் ஏன் என்னம்மா என அதட்டி பேசுவது ரசிகர் உடைய பேவரட்டாக இருக்கிறது எதிர்நீச்சல் சீரியல் இன்று உச்சத்தில் இருக்க காரணம் குணசேகரன் என்கின்ற மாரிமுத்து என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி கொண்டு இருந்த மாரிமுத்து டப்பிங் பண்ணி ஒன்றை முடித்துவிட்டு சாலிகிராம் வழியே வீடு திரும்பும் போது மாரடைப்பால் அவர் இயற்கை எய்தினார்.
விஷயத்தை கேள்விப்பட்ட சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர் வர முடியாதவர்கள் twitter பக்கத்தில் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் சினிமா பிரபலங்கள் வெளியிட்ட twitter பதிவை நீங்களே பாருங்கள்.
Shocking to hear about this 💔
Oflate been following a lot of his work
RIP sir 🙏🏻 #RIPMarimuthu sir
Condolences to his family pic.twitter.com/uYDMso4clj— Shanthnu (@imKBRshanthnu) September 8, 2023
Actor Maarimuthu Who Acted In #Jailer #PariyerumPerumal Etc Passed Away due to Heart Attack 💔
Will Miss his "Indhamaa Yaaaei" 😏🥲#RIPMarimuthu 😐 pic.twitter.com/6EIWWQBigS
— Arun Vijay (@AVinthehousee) September 8, 2023
This is an unbelievable news. So shocking . #RIPMarimuthu sir, a fine actor & director. pic.twitter.com/mo95YmQKF8
— G Dhananjeyan (@Dhananjayang) September 8, 2023