Ethirneechal Marimuthu: எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஆதி குணசேகரன் இன்று காலையில் மாரடைப்பாடு உயிரிழந்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து மாரிமுத்து இதன் மூலம் பிரலமாகிய தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மாரிமுத்து இன்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் பொழுது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
சமீபத்தில் மாரிமுத்து ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இந்தியன் 2, கங்குவார் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இயக்குனர், நடிகர், சீரியல் நடிகர் என பன்முகத் திறமைகளை காட்டி புகழடைந்த மாரிமுத்து தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்.
இவர் ஆரம்பத்தில் ராஜ்கிரன், மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட ஏராளமான இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். இதனை அடுத்து கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்களின் கதை சிறப்பாக இருந்தாலும் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.
எனவே நடிக்க தொடங்கினார் அப்படி வாலி, உதயா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் மாரிமுத்து சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலின் மூலம் தான் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் மாரிமுத்துவிற்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். 1994ஆம் ஆண்டில் பாக்கியலட்சுமியை திருமணம் செய்து கொண்ட மாரிமுத்து கடந்த 2ம் தேதி தன்னுடைய 27ஆவது பிறந்த நாளை குடும்பத்தினர்களோடு இணைந்து கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களிலேயே தங்களை விட்டு மாரிமுத்து பிரிந்து விட்டதாக குடும்பத்தினர்கள் வேதனையிலும், மிலா துயரத்திலும் இருந்து வருகின்றனர்.