தமிழ் திரையுலகில் நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து தற்போது ஒரு திரைப்படத்தில் கை கோர்த்துள்ளார்கள்.
அந்த திரைப்படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதியை வைய்த்து இதற்கு முன்பு நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
மறுபடியும் விக்னேஷ் சிவன் தற்போது இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதியுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் விக்னேஷ் சிவனின் காதலியான நயன்தாரா மற்றும் சமந்தா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
இதனையடுத்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை சமந்தா விக்னேஷ்சிவனை கிண்டலடித்த வீடியோவை நாம் இதற்கு முன்பு பார்த்தோம்.
அந்த வகையில் தற்போது அந்த திரைப்படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படம் என்னவென்றால் விஜய் சேதுபதி காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்காக தனது உடல் எடையை முழுமையாக குறைத்துள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமானது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இதோ இந்த புகைப்படம்.