Mari selvaraj : இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் இவர் இயக்கத்தில் கடைசியாக மாமன்னன் திரைப்படம் வெளிவந்து வெற்றி பெற்றது இந்த நிலையில் காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் மாரி செல்வராஜ் குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது..
கர்ணன் திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒரு 50 நடிகர்களை மாரி செல்வராஜ் அழைத்துச் சென்று இருக்கிறார். போலீஸ்காரர்கள் அடிப்பது போன்ற காட்சிகளை எங்களை பயன்படுத்திக்கொண்டு பாதுகாப்பிற்காக பின்னால் ஊர்காரர்களை நிற்க வைத்து விட்டார் டயலாக் பேசுவது அனைவருமே ஊர்காரர்கள் ஆனால் அடி வாங்குவது மட்டுமே எங்களை போன்ற நடிகர்கள்..
அவர் தன்னுடைய படங்களின் உண்மை தன்மையை அதிகரிக்க எனக்கு அந்த பகுதியில் வாழும் மக்களின் முகங்கள் தேவைப்படுகிறது என்று சொல்கிறார் அப்படி சொல்லக்கூடியவர் மலையாள சினிமா துறையில் இருந்து ஏன் பகத் பாசலை வர வைக்கிறார் நடிகர் லாலை வர வைக்கிறார் அவர்களது அந்த பகுதியில் இருக்கும் மக்களின் முகம் அப்படியே இருக்கிறதா என்ன இதெல்லாம் நமக்கு காது குத்துற வேலை..
மாரி செல்வராஜ் தன்னுடைய மக்கள் நசுக்கப்பட்டதாக சொல்லி படம் எடுக்கிறார் அது மிகவும் நல்ல விஷயம் தான் அப்படி நசுக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் கோடி கோடியை பணம் சம்பாதிப்பீர்கள் சொந்த படம் எடுக்கிற அளவுக்கு சம்பாதித்து விட்டீர்கள் அவர்களுக்கு அதில் கொஞ்சம் கொடுத்தீர்களா..
மாரி செல்வராஜ் ஒரு புதிய வீடு ஒன்றை வாங்கினார் அந்த வீட்டிற்கு பாதை கொஞ்சம் சரியில்லாமல் இருந்தது இதனை எடுத்து அவருக்கு ஏற்றவாறு அவரே பாதையை உருவாக்கிக் கொண்டார் கேவலமான செயல்களை சில இயக்குனர்கள் செய்கிறார்கள் அதாவது அடிப்பது..
அறிவு கெட்டவர்கள் அப்படித்தான் அடிப்பார்கள் எப்படி அடிக்கலாம் நடிப்பு வரவில்லை என்று தானே நீங்கள் அடிக்கிறீர்கள் எங்களை போன்ற நடிகர்கள் அங்கு இருந்தால் நீங்கள் பிறரை அப்படி அடிக்க வேண்டும் கால் மீது கால் போட்டு பார்த்துக் கொண்டிருக்கலாமே உதவி இயக்குனர்களை அடிக்கிறார் அதாவது படத்தின் வெறியில் அடிக்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம் நடிகர்களை அவர் அப்படி அடிக்கிறார்.
அது ஏற்றுக்கொள்ளவே முடியாது ஒரு நடிகரை அவர் வாழமட்டையால் அந்த அடி அடித்தார் மாமன்னன் திரைப்படத்தில் ஒரு நடிகரின் முடியை பிடித்து வெறிகொண்டு இழுத்தார் பெரும்பான்மையான இயக்குனர்கள் ஊரில் படம் எடுக்கும் போது தான் ஒரு மிகப்பெரிய இயக்குனர் என்பதை வெளி காட்ட வேண்டும் என்பதற்காக வெறிகொண்டு நடக்கிறார்கள் தயவுசெய்து அந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.