பணத்திற்காக தமிழ் சினிமாவில் திணிக்கப்படும் பலான காட்சிகள்..! டோட்டலாக மாறிய தமிழ் சினிமா..!

kerthi
kerthi

பொதுவாக தமிழ் சினிமாவில் எடுக்கப்படும் ஒவ்வொரு திரைப்படங்களும் வித்தியாசமான கதையம்சம் உள்ள திரைப்படமாக இருக்கும் அந்த வகையில் காதல் அல்லது குடும்பம் அல்லது சென்டிமெண்ட்  இல்லையென்றால் ஆக்சன்  போன்றவற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்.

மேலும் இவ்வாறு உருவாகும் திரைப்படங்கள் மக்களால் பல நாட்கள் கொண்டாடும் வகையில் அமைந்திருப்பது வழக்கம் தான் ஆனால் தற்போது உருவாகும் திரைப்படத்தின் கதைகள் முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் உடையதாக இருப்பது மட்டுமில்லாமல் மிகவும் மோசமான காட்சிகள் மற்றும்  வசனங்கள் இடம்பெற்று வருகிறது.

அந்த வகையில் இது போன்ற திரைப்படங்களை குடும்பத்துடன் சென்று பார்ப்பதற்கு ரசிகர்கள் தயங்குவது மட்டுமில்லாமல் குழந்தைகளை தியேட்டருக்கு கூட்டிச் செல்ல பலரும் பயந்து இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா தற்போது மோசமாக வியாபாரத்தில் இறங்கி விட்டது.

தியேட்டரில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்துமே சென்சார் சான்றிதழ் வாங்கியபிறகு வெளியிடப்படுகிறது இதனால் தியேட்டரில் வெளியாகும் திரைப்படத்தில் பெருமளவு வன்முறைகள் இருக்க நேரிடாது ஆனால் ஓடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படத்தில் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்துவது மட்டும் இல்லாமல் பல தீண்டத்தகாத காட்சிகளும் அமைகிறது.

அதுமட்டுமில்லாமல் ஓடிடி நிறுவனங்களும் இதுபோன்ற காட்சிகளை வைக்க சொல்லி இயக்குனர்களிடம் கேட்டுக் கொள்கிறார்களாம். அந்த வகையில் சமீபத்தில்  கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தியது மட்டுமில்லாமல் கேங்க் ரேப் கொலை என பல காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இது போன்ற காட்சிகள் வசனங்கள் இல்லாத திரைப்படங்கள் வெளி வராத என பலரும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் நல்ல திரைப்படத்தை இயக்க இயக்குனர்கள் முன்வந்தாலும் வியாபார நோக்கத்தில் இதுபோன்ற காட்சிகள் திரைப்படத்தில் உருவாகிவிடுகிறது.

அந்த வகையில் ஓடிடி தளத்திலும் சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்டால் இதுபோன்ற காட்சிகளை தவிர்க்க முடியும் என பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.