ஐஸ்வர்யா ராய்க்கும், எனக்கும் இது ரொம்ப ஒத்துப் போகிறதாம் பல பேர் கூறுகின்றனர் – நிதி அகர்வால் பேட்டி.!

nithi-agarwal
nithi-agarwal

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக பார்க்கப்படுபவர் நிதி அகர்வால் ஆரம்பத்தில் தெலுங்கில் தொடர்ந்து தனது திறமையும் கிளாமரையும் காட்டி ஓடிய இவர் ஒரு கட்டத்தில் தமிழ் பக்கம் திசை திரும்பினார் அதுவும் வந்தவுடனே இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தன. முதலில் ஜெயம் ரவியுடன் பூமி, சிம்புவுடன் ஈஸ்வரன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்தார்.

ஆனால் அந்த இரண்டு திரைப்படங்களுமே ஒரே நாளில் வெளிவந்து மண்ணை கவியது அதனை தொடர்ந்து நிதி அகர்வால் அவ்வப்போது தலை காட்டினாலும் பெரிய அளவு இவரது படங்கள் ஹிட் அடிக்க வில்லை இதனால் நல்ல கதைகளை தேர்வு செய்யவே அவர் விரும்பினார் இந்த நிலையில் தான் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான கலகத் தலைவன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி நடித்தார்

கலகத் தலைவன் திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் தற்பொழுது அவரும் சந்தோஷமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார் அப்படி சமீபத்திய பேட்டி ஒன்று சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

முதலாவதாக உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் பின் தொடர என்ன காரணம் என கேட்டுள்ளனர். என்னுடைய சிலையை Valentines day பரிசாக தெலுங்கு, தமிழ் ரசிகர்கள் கொடுத்தார்கள் அது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் கூட எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது என் மீது உள்ள அன்பு காரணமாக அவர்கள் கொடுத்தார்கள்.

திரைப்படத்தில் கதாநாயகன் கதாநாயகி மீதுள்ள அன்பு காரணமாக ஆக்சன் காட்சிகள் இடம்பெறுகிறது அன்பு அதிகமாக இருக்கும் பொழுது எது செய்தாலும் தவறாக தெரியாது எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 2.6 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள் இதற்கு காரணம் அன்பு மட்டும்தான் என்றார். நீங்கள் எந்த நடிகை போல் இருப்பதாக உணர்கிறீர்கள் என கேட்டுள்ளனர் அதற்கு என்னை உலக அழகி ஐஸ்வர்யா ராய் உடன் ஒப்பிடுகிறார்கள் அவரது கண்கள் போன்று எனது கண்களும் இருப்பதாக கூறுகிறார்கள் எனக்கு பொதுவாக ஐஸ்வர்யா ராய் ரொம்ப பிடிக்கும் அவர் நடித்த தேவதாஸ் உள்ளிட்ட படங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் ஒரு admirable lady.