தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் வில்லனாக களமிறங்கி தனது நடிப்பால் அனைவரும் மிரட்டியவர் நடிகர் மன்சூர் அலிகான். தற்போதும் படங்களில் நடித்து வருகிறார் ஆனால் தற்போது அவர் காமெடியான வில்லன் கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடித்து வருகிறார்கள். 90களில் நடித்தது போல் தற்போதும் ஏதாவது ஒரு படத்தில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை வெளிக்காட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் பிக் பாஸ் குறித்து ஒரு தகவலை வெளியிட்டு உள்ளார் இந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5 சீசன்கள் வெற்றிகரமாக ஓடி முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை 24 மணி நேரங்களும் ரசிகர்கள் பார்க்கலாம் என்று கூறிவிட்டார்கள் இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தற்போது 20 நாட்களைக் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் சாந்தி அவர்கள் வெளியேற்றப்பட்டார் அதனை தொடர்ந்து youtube பிரபலமான ஜி பி முத்து அவர்கள் தனது மகன் உடல்நிலை சரியில்லாததால் தானே முன்வந்து பிக் பாஸில் இருந்து விலகிக்கொண்டார் இதனால் ஜி பி முத்து ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தார்கள்.
மேலும் ஜிபி முத்து வெளியேறிய பிறகு அவருடைய இடத்திற்கு நடிகர் மன்சூர் அலி கானை களம் இறக்க திட்டமிட்டு உள்ளனர் இதற்கு விளக்கம் அளித்த நடிகர் மன்சூர் அலிகான் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் அந்த நிகழ்ச்சியில் கூத்தாட எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்று கூறியுள்ளார் அது மட்டுமல்லாமல் அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாள் நான் தான் பிக் பாஸ் ஆக இருப்பேன் என்று கூறியுள்ளார் இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறாய் வருகிறது.