80 காலகட்டத்தில் வில்லனாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகர் மன்சூர் அலிகான். இவர் தற்பொழுது தொடர்ந்து காமெடி திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் அரசியலிலும் ஆர்வம் கொண்டு வரும் இவர் தேர்தலில் போட்டியிட்டார் அதில் குறைந்த வாக்குகள் பெற்று தேர்தலில் தோல்வி அடைந்தார். மேலும் மன்சூர் அலிகான் எப்பொழுதும் எந்த பேட்டியாக இருந்தாலும் தன்னுடைய மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுபவர் என்பது பலருக்கும் தெரியும்.
மேலும் இதன் காரணமாக இவருடைய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியும் உள்ளது இப்படிப்பட்ட நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரகளை செய்திருக்கிறார். அதாவது பிக்பாஸ் டைட்டில் வின்னரான ராஜு இந்த தொலைக்காட்சியில் ராஜீவ் வுடுல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் மன்சூர் அலிகான் பங்கு பெற்ற நிலையில் இவருடைய பேச்சு ரசிகர்களை பெரிதளவில் ஈர்த்துள்ளது.
அதாவது விஜய் டிவியில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது சூரிய பிடிக்க ஆரம்பித்துள்ளது எனவே மேலும் இது நிகழ்ச்சி நல்ல வரவேற்பினை பெற வேண்டும் என்பதற்காக தரமான ஆளை இறக்க முடிவு செய்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து வெளியேறினார்.
இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இவர் வெளியேறியதால் பலரும் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள். எனவே தற்பொழுது நடிகர் மன்சூர் அலிகான்யிடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் மேலும் இதன் காரணமாக மன்சூர் அலிகான் சில கண்டிஷங்களை போட்டு இருப்பதால் விஜய் டிவி குழப்பத்தில் இருந்து வருகிறதாம்.
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் கலந்துக்கொள்ள வேண்டும் என்றால் பெரிய அளவுத் தொகையை சம்பளமாக கேட்கிறாராம். அது கூட பரவாயில்லை நான்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவேன் எனவும் கூறி இருக்கிறார். இதனை தொடர்ந்த அவர் பேசும்பொழுது நான் என்ன வேண்டுமானாலும் பேசுவேன் எனக்கு மனதில் எதுபட்டதோ அதை வெளிப்படையாக பேசுவேன் என்னை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இவ்வாறு மன்சூர் அலிகான் கண்டிஷன் போட்ட நிலையில் விஜய் டிவி அவருக்கு ஒரு கும்புடை போட்டுவிட்டு கிளம்பி விட்டதாம்.