வெள்ளித்திரை போல சின்னதிரையும் தொடர்ந்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்க புதிய புதிய நிகழ்ச்சி மற்றும் சீரியல்களை கொடுத்து அழகு பார்த்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி இதுவரை பல்வேறு விதமான ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களை நடத்தி வெற்றி கண்டு வருகிறது..
அதிலும் குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கிறது இதனால் இந்த நிகழ்ச்சியை சீசன் சீசன்னாக தொகுத்து வழங்கி வருகிறது இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஆறாவது சீசன் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி கோலாகலமாக தொடங்கியது.
வழக்கம்போல உலகநாயகன் கமலஹாசன் இந்த பிக்பாஸ் சீசனையும் சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்கி வருகிறார் பிக்பாஸ் ஆறாவது சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பிக்பாஸ் வீட்டில் எலிமினேஷன் ரவுண்டு இருப்பதால் ஒரு சிலர் தற்போது வெளியேறி உள்ளனர்.
மேலும் ஜிபி முத்து சில காரணங்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.. இப்படி இருக்கின்ற நிலையில் மன்சூர் அலிகான் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது நான் பிக்பாஸ் வீட்டில் இருந்திருந்தால் நான் தான் பிக்பாஸ்ஸாக இருந்திருப்பேன்..
பிக்பாஸ் வீட்டில் கும்பாலம் அடிப்பது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. நான் பிக்பாஸ் வீட்டில் இருந்திருந்தால் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்படுத்தி இருப்பேன் என கூறினார்.. இதைக் கண்ட ரசிகர்கள் வா தலைவா உன்ன மாதிரி ஆள் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேவை என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது..