Leo : தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக பார்க்க பார்க்கப்படுபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களுமே பெரிய வெற்றி படங்கள் கடைசியாக வெளிவந்த “விக்ரம்” திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது.
அதனைத் தொடர்ந்து விஜயுடன் கூட்டணி அமைத்து “லியோ” படத்தை எடுத்துள்ளார் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 10 ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியிடப்பட குழு திட்டமிட்டு இருக்கிறது படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், த்ரிஷா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
லியோ படத்தில் இருந்து நான் ரெடி பாடல் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து சஞ்சய் தத் gilmpse வீடியோ வைரலானது இந்த நிலையில் மன்சூர் அலிகான் லியோ அப்டேட் கொடுத்துள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. லியோ படத்தில் அனுராக் காஷ்யப் பாகத்தைப் பற்றி ஸ்கிரிப்ட் பேப்பரை பார்த்தேன்.
அதுமட்டுமல்லாமல் அடுத்த நாள் லியோ படப்பிடிப்பிற்கு வரும்போது அனுராக் காஷ்யப் என பெயரிடப்பட்ட கேரவனை பார்த்தேன் அதனுள் சென்று பார்த்தால் அனுராக் காஷ்யப்புடன் லோகேஷ் கனகராஜ் பட கதையை பற்றி பேசிக்கொண்டிருந்தார். வந்தாரு என்ன நடிச்சாருனு தெரியல..
டப்பு டப்புன்னு எடுத்து சுட்டார் அய்யய்யோ போ மேன் என லியோ படத்தைப் பற்றி உளறினார். சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்னு சொல்லி மொத்ததையும் மன்சூர் அலிகான் உளறியது தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.