பல வருடம் கழித்து மனோரமா மற்றும் நாகேஷ் ஜோடி சேர்ந்த திரைப்படம்..! அதுவும் இந்த காமெடி நடிகர் திரைப்படத்திலா..?

manoramma-1

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள்தான் நாகேஷ் மற்றும் மனோரமா.  இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் பெருமளவு சாதித்து உள்ளார்கள். அந்தவகையில் இவர்களுடைய காமெடிக்காக வே திரைப்படங்கள் பார்ப்பவர்கள் ஏராளம்.

அந்த வகையில் முன்பெல்லாம் நடிகர்களின் கால்ஷீட் வாங்குவதைவிட காமெடி நடிகர்களில் கால்சீட் வாங்குவதுதான் மிகவும் கஷ்டமான செயலாக இருக்கும். ஏனெனில் இவர்கள் இருவருமே மிக பிஸியாக திரைப்படங்களில் நடித்து வந்தார்கள்.

இவ்வாறு இவர்களை தங்களுடைய திரைப்படங்களில் நடிக்க வைப்பதற்காக பல்வேறு நடிகர்களின் திரைப்படங்களும் இழுபறியில் இருந்தது உண்டு.  அந்த வகையில் இவர்கள் தனித்தனியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் தங்களுடைய நடிப்பு திறனை வெளிகாட்டி உள்ளார்கள்.

அந்த வகையில் இவர்கள் இருவரும் 1979ஆம் ஆண்டு  நாடகமே உலகம், ஞானக்குழந்தை, நல்லதொரு குடும்பம் ஆகிய திரைப்படங்களில் நாகேஷ் மற்றும் மனோரமா ஆகிய இருவர்களும் ஜோடியாக நடித்து உள்ளார்கள் அதன்பிறகு இவர்கள் இருவரும் பல திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் ஜோடியாக எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

பின்னர் 2006 ஆம் ஆண்டு வடிவேலு நடிப்பில் வெளிவந்த இருபத்தி மூன்றாம் புலிகேசி திரைப்படத்தில் தான் நாகேஷ் மற்றும் மனோரமா ஜோடியாக நடித்து இருந்தார்கள். இவ்வாறு இவர்கள் இருவரும் சுமார் 27 வருடம் கழித்து மீண்டும் ஒன்றாக நடித்திருந்தார்கள்

nakesh-1
nakesh-1

இவ்வாறு அரசியலை மையமாக வைத்து நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர் மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் நல்ல வரவேற்பையும் பெற்று வசூலிலும் வெற்றி கண்டது.