நடிகர் விஷால் தமிழ் சினிமா உலகில் ரொமான்டிக் ஹீரோவாக அறிமுகமாகி பின் ஆக்சன் ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்தார். தொடர்ந்து ஆரம்பத்தில் வெற்றியை ருசித்தாலும் போகப்போக இவரது படங்கள் தோல்வியை சந்தித்தன. இதிலிருந்து மீண்டு வர நடிகர் விஷால் தொடர்ந்து படங்களில் நடித்து தான் பார்க்கிறார்.
ஆனால் வெற்றி என்ற கனி மட்டும் அவருக்கு கிடைக்காமல் இருந்து வருகிறது. விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான எனிமி, வீரமே வாகை சூடும் போன்ற படங்கள் தோல்வி படங்களாக மாறின. இருப்பினும் தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடிப்பில் லத்தி என்ற திரைப்படம் தற்போது உருவாகி உள்ளது.
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்குமென கூறப்படுகிறது காரணம் இந்த படத்தில் போலீஸ்ஸாக விஷால் நடித்துள்ளார். அதற்காக உடல் எடையை எல்லாம் பிட்டாக மாற்றி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஷால் உடன் கைகோர்த்து சுனைனா, பிரபு மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
லத்தி படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் மட்டுமே சுமார் 300 வில்லன்களை விஷால் அடித்து நொறுக்குவது போல படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஒரு பக்கம் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக வர வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது அந்த அளவிற்கு இந்த படம் வந்துள்ளதாக சினிமா பிரபலங்கள் கூறுகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தின் விழா ஒன்றில் நடிகர் மனோபாலா விஷாலை பற்றி பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது. இதுவரை நான் போலீஸ் ட்ரைசில் சுமார் 400 படங்களில் நடித்துள்ளேன். ஆனால் உன்னை இந்த ட்ரசில் பார்க்கும்போது எனக்கு சிரிப்பு சிரிப்பாக வருவதாக கூறியுள்ளார்.