ஸ்ரீமதிக்கு நியாயம் கேட்கிறேன் என சுமதிக்கு நியாயம் கேட்டு ட்வீட் போட்ட பிரபல நடிகர்.! கழுவி கழுவி ஊற்றிய ரசிகர்கள் அலறி அடித்து ஓடிய நடிகர்…

srimathi87
srimathi87

கடந்த சில நாட்களாகவே  தமிழ்நாடு முழுவதும்  மாணவியின் மரணம் குறித்து தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து பிரபல நடிகர் ஆன மனோபாலா பதிவிட்டுள்ள பதிவை பார்த்து ரசிகர்கள் மரணமாய் கலாய்த்து வருகிறார்கள். இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் சம்பவம் தான் கள்ளக்குறிச்சி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியின் மரணம். கணியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தார்  இந்த நிலையில் ஜூலை 13ஆம் தேதி ஸ்ரீமதி மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக பள்ளி நிர்வாகம் ஸ்ரீமதியின் அம்மாவுக்கு தகவல் தெரிவித்தார்கள்.

ஆனால் அவர் அங்கிருந்து தற்கொலை செய்து கொள்ளவில்லை என ஸ்ரீமதியின் அம்மா மற்றும் உறவினர்கள் அனைவரும் கூறி வருகிறார்கள் ஏனென்றால் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் எந்த ஒரு ரத்தமும் இல்லை உடலில் எந்த ஒரு காயங்களும் எலும்பு முறிவும் ஏற்படவில்லை என ஸ்ரீமதி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.

srimathi
srimathi

இந்த நிலையில் மீண்டும்  ஸ்ரீமதியின் கேஎஸ் சி பி சி ஐ டி க்கு மாற்றப்பட்டுள்ளது கேசை விசாரித்து வரும் அதிகாரிகள் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவலை கொடுத்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் மாணவியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் மாணவியின் பெற்றோர்கள் சிசிடிவி காட்சியை கேட்ட பொழுது பள்ளி நிர்வாகம் கொடுக்கவில்லை என குற்றம் சாட்டி இருந்தார்கள் போலீஸ் விசாரித்ததில் காலையில் மாணவி உடலை காவலர் தரையில் கண்டு எடுக்கும் காட்சிகள் மட்டும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் மாணவிக்கு நீதி வேண்டும் எனவும் கூறி வருகிறார்கள். அந்த வகையில் இதுகுறித்து பல பிரபலங்களும் ஸ்ரீமதிக்கு  நியாயம் வேண்டுமென குரல் கொடுத்து வருகிறார்கள் அந்த வகையில் காமெடி நடிகர் மனோபாலா மாணவியின் மரணம் குறித்து ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

srimathi
srimathi

அதில் அவர் கூறியதாவது justice for sumathi என பதிவிட்டு அதன் பிறகு ஐயோ என பதிவிட்டிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன சுமதியா  டாக்டர் திரைப்படத்தில் அர்ச்சனா சுமதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அந்த புகைப்படத்தை பதிவிட்டு இந்த சுமதி எனக் கேள்விய எழுப்பி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் இன்னும் பங்கமாய் கலாய்த்து வருகிறார்கள்  உடனே இதை பார்த்த மனோபாலா பதிவை நீக்கி விட்டார்.

srimathi
srimathi