தமிழ் சினிமாவில் அனைவரிடமும் நட்பாகவும் நெருக்கமாகவும் பழகக்கூடிய ஒரு சில மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் மனோபாலா. இந்த நிலையில் மனோபாலா கடந்த சில தினங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக தவறிவிட்டார் இவரின் இழப்பு சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, அது மட்டும் இல்லாமல் பல பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
உடல் நலக்குறைவால் மறைந்த மனோபாலா சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர் ,நடிகர் குணச்சித்திர நடிகர் என பணியாற்றியுள்ளார்.
உதவி எனத் தேடி வந்தவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர் மிகவும் எளிமையான மனிதர் எளிமையாக அனைவரிடமும் பழகக் கூடியவர். மனோபாலாவின் உடலுக்கு பலரும் இரங்கல் தெரிவித்தார்கள் அதேபோல் தளபதி விஜய் மனோபாலாவை நேரில் சென்று மாலை அணிவித்து இரங்கல் தெரிவித்தார்.
மனோபாலா விஜய் அவர்களுடன் இணைந்து துப்பாக்கி நண்பன் என பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மனோபாலா நடித்துள்ளார். சினிமா பிரபலங்கள் இடையே மிகவும் நெருக்கமாக பழகும் மனோபாலா விஜயுடன் நெருக்கமாக பழகி உள்ளார். அப்பொழுது விஜய் மனோபாலாவிடம் கூறிய தகவல்தான் தற்பொழுது இணையதளத்தில் படும் வேகமாக வைரல் ஆகி வருகிறது.
தளபதி விஜய் அவர்கள் ஐம்பதாவது திரைப்படமாக சுறா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் தோல்வியை தழுவியது அது மட்டும் இல்லாமல் அப்பொழுது உள்ள காலகட்டத்திலேயே பல ட்ரோல்களை சந்தித்த திரைப்படம் தான் சுறா. இந்த நிலையில் மனோபாலா எதர்ச்சியாக விஜய் அவர்களிடம் ஏன் சுறா திரைப்படத்தில் நடித்தீர்கள் என கேட்டாராம்.
அதற்கு தளபதி விஜய் அவர்கள் நான் சுறா திரைப்படத்தின் கதையை கேட்ட பொழுது எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஆனால் இயக்குனர் என்னிடம் கதை சொன்ன அளவிற்கு படம் வெளியாகவில்லை அதற்கு நேர் மாறாக வெளியானது ரொம்ப நம்பினேன் ஆனால் ஏமாந்து விட்டேன் என மனோபாலாவிடம் ஓப்பனாக விஜய் பேசியுள்ளார். இதனை சமீபத்தில் ஒரு மேடையில் மனோபாலா தெரிவித்து இருந்தார். இந்த தகவல் மனோபாலாவின் மறைவிற்குப் பிறகு மிகவும் வேகமாக வைரல் ஆகி வருகிறது.