இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் நிரம்பி வழியும் வகையில் வெளியானது வெங்கட் பிரபுவின் மன்மதலீலை ட்ரைலர்.!

வெங்கட் பிரபு ஒரு தமிழ் பட இயக்குனர் ஆவார் இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர் திரைக்கதை ஆசிரியர் என பல முகங்களைக் கொண்டவர் ஆரம்பத்தில் இவர் நடிக்க தொடங்கினார் ஆனால் பெரிதாக அது ஒன்றும் செட்டாகவில்லை பின்பு சென்னை 600028 என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார் இந்த திரைப்படம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது.

அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சரோஜா, கோவா, மங்காத்தா பிரியாணி, மாஸ் என்ற மாசிலாமணி, சென்னை 600028 இரண்டாம் பாகம் திரைப்படங்கள் வெளியாகின இந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றதால் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கும் இயக்குநர்களில் ஒருவராக மாறினார்.

இந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தற்போது மன்மதலீலை என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாட்டிக் கொள்ளாதவரை எல்லா ஆண்களும் ராமர்களே என்ற வசனத்துடன் வெளியாகிய ட்ரெய்லர் இரட்டை அர்த்தங்களுக்கு  பஞ்சமில்லாமல் வசனங்கள் வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் படத்தில் கிளாமர் காட்சிகள் அதிகமாக நிரம்பி வழிகிறது. அசோக் செல்வன் சம்யுக்தா ஹெக்டே, ஸ்முருத்தி வெங்கட்,  பிரேம்ஜி அமரன், கருணாகரன், ஜெயபிரகாஷ் என பலர் நடித்துள்ளார்கள். பிரேம்ஜி இசையில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு வெங்கட் ராஜன் ஒளிப்பதிவும் செய்துள்ளார்.

இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.