மன்மதன் படத்தில் சிம்புவுக்கே அல்வா கொடுத்த சிந்து துலானி இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்..!

manmathan
manmathan

Manmadhan actress : சினிமாவில் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்து பின்பு மிகப்பெரிய அளவில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகள் பெரும்பாலும் தற்போது சினிமாவில் காணாமல் போய் வருகின்றனர் அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த சுள்ளான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சிந்து துலானி.இப்படம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று பிரபலமடைந்தார்.

இதை தொடர்ந்து அவர் சிம்பு நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த மன்மதன் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இப்படத்தில் சிந்து துலானி அவர்கள் கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் இவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைஅடுத்து அவர் மேலும் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழில் வலம் வந்தார் இவர் கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளிவந்த மஜா என்ற திரைப் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் காணமுடியவில்லை ஆனால் தெலுங்கு சினிமாவில் அவ்வப்போது சில படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவரது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டு தற்போது செட்டிலாகிவிட்டார். சிந்து துலானி அவரது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தையை புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்தது இப்படி மாறி விட்டார் என அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்.

sindhu
sindhu
Sindhu_Tolani
Sindhu_Tolani