தமிழ் சினிமாவில் மிகப் பெரிய பட்ஜெட் படங்கள் தான் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சுமாரான திரைப்படங்கள்தான் பெரும்பாலும் தோல்வியை சந்திக்காமல் மேலும் நல்ல கலெக்ஷனை ஈட்டும். அந்தவகையில் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான பீட்சா திரைப்படம் குறைந்தபட்ச செலவில் உருவான திரைப்படமாக இருந்தாலும் மிகப்பெரிய வசூல் வேட்டை செய்து காண்பித்தது.
இந்த திரைப்படத்தை சிவக்குமார் என்பவர் தயாரித்து இருந்தார். இந்தப் படம் குறித்தும் கார்த்திக் சுப்புராஜ் குறித்தும் அவர் சமிபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறுகையில் : அவரிடம் பலபேர் வந்து கதை சொல்லி உள்ளனர் அவர்களில் ஒருவர்தான் கார்த்திக் சுப்புராஜ். அவர் முதலில் எனக்கு ஜிகர்தண்டா திரைப்படத்தின் கதையை சொன்னார் ஆனால் அந்த படத்தின் கதைக்கு சுமார் 5 அல்லது 6 கோடி செலவாகும் என கணிக்கப்பட்டது அப்போது என்னிடம் அவ்வளவு காசு இல்லை.
பிறகு என்ன செய்யலாம் என யோசித்தபோது நான் வேறு ஏதாவது கம்மி பட்ஜெட்டில் ஸ்கிரிப்ட் இருக்கிறதா என கேட்டேன் அதற்கு யோசித்து ஒரு கதையை சொன்னார் அதுவே பீட்சா படத்தின் கதை. கதை விரிவாகவும் தெளிவாகவும் அமைந்திருந்ததால் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது எவ்வளவு பட்ஜெட் வரும் என கேட்டேன் ஒரு கூடி வரும் எனச் சொன்னார். அதன் பிறகு நாங்கள் இந்த படத்தை எடுக்க முயற்சி செய்தோம்.
படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஹீரோவை தேர்வு செய்ய நாங்கள் முதலில் பிரசன்னாவை கமிட்டி செய்ய முயற்சித்தோம் படத்தின் கதையை கேட்டுவிட்டு அவர் கமிட்டாகவில்லை பிறகு நாங்கள் நடிகர் வைபோவிடம் கதையைச் சொன்னதும் அவரும் இந்த படத்தின் கதையை நன்றாக இல்லை என கூறி வெளியேறிவிட்டார். பிறகு யாரை கமிட் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கார்த்திக் சுப்புராஜ் சித்தார்த்தை கமிட் செய்யலாம் என கூறினார்.
ஆனால் அது நடைபெற முடியவில்லை. பிறகு நாங்கள் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தபோது கார்த்திக் சுப்புராஜ் எனக்கு மிக நெருங்கிய நண்பராக விஜய்சேதுபதி இருக்கிறார் அவரிடம் சொல்லலாம் என கூறினார். பின் நாங்கள் கதையை சொல்லி அவரை புக் செய்தோம் நடிகையாக யாரை தேர்வு செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓவியாவை தேர்வு செய்தோம் அவர் இந்த படத்தின் கதையில் நடிக்கவில்லை பிறகுதான் ரம்யா நம்பீசன் கமிட்டானார்.
நாங்கள் இவர்கள் இருவரையும் வைத்து படத்தை எடுத்தோம் வெறும் ஒரு கோடியே 43 லட்சம் செலவானது ஆனால் படம் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி சுமார் எங்களுக்கு ஐந்து அல்லது ஆறு கோடி லாபத்தை பெற்று கொடுத்தது என கூறினார்.