வெங்கட் பிரபு வெளியிட்ட புகைப்படத்தால் முடிவு வந்த மங்காத்தா 2.? கடுப்பில் அஜித்.

ajith
ajith

தமிழ் சினிமா உலகில் அதிக ஆண் ரசிகர்களை கவர்ந்து இழுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகர் அஜித்குமார். இப்பொழுது இவர் தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை இயக்குனர் ஹச். வினோத் இயக்கி வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், சென்டிமென்ட் படமாக எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியது அதாவது மங்காத்தா திரைப்படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் எதிர் நோக்கியிருந்தனர் ஏன் என்றால் முதலில் வெளிவந்த மங்காத்தா படம் அந்த அளவிற்கு சூப்பராக இருந்தது.

இந்த திரைப்படத்தின் 2வது பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர் அந்த சமயம் அஜித் கூட மங்காத்தா இரண்டாவது பாகம் ரெடியாக இருந்தால் நடிக்கலாம் என வெங்கட் பிரபுவிடம் சொல்லி இருந்தாராம். ஆனால் உடனடியாக கதை இல்லாத காரணத்தினால் வெங்கட் பிரபு சிறிய பிரேக் விட்டார் என கூறப்படுகிறது உண்மையில் நடந்தது வேறு அதாவது அஜித்துக்கு தெரிந்த கூட ஒரு புகைப்படம் வெளி வரலாம்.

ஆனால் தெரியாமல் புகைப்படம் வெளியே வரக்கூடாது என ரொம்ப கவனமாக இருப்பார் அஜித். மங்காத்தா ரிலீசுக்கு பிறகு மங்காத்தா-2 குறித்து வெங்கட் பிரபுவும், அஜித்தும் சந்தித்துக் கொள்வது வழக்கமாக இருந்தது அப்போது ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ajith
ajith

வெங்கட்பிரபு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மங்காத்தா-2 எடுக்க போகிறார்கள் என கூறி ஆரவாரம் செய்கின்றனர். இதை அறிந்த அஜித் கடுப்பாகி இனி வெங்கட்பிரபு கால்சீட் கொடுக்க கூடாது என  முடிவெடுத்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அந்தகண் நேர்காணல் ஒன்றில் கூறினார்.