நடிகர் அஜித் குமார் தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ராமோஜி பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டு வருகிறது இது ஒரு பக்கமிருக்க அஜித்தை வைத்து பல இயக்குனர்கள் படம் இயக்க காத்துக்கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் பல வருடங்களுக்கு முன் அஜித்தின் 50-வது திரைப்படமான மங்காத்தா படத்தை எடுத்து வெற்றி கண்டவர் வெங்கட் பிரபு.
மங்காத்தா படம் முழுக்க முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜித் நடித்து இருந்தார். இருந்தாலும் இந்த படம் அப்பொழுது வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இந்த படத்தில் அஜித்துடன் கை கோர்த்து திரிஷா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, அர்ஜுன் மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தி இருந்தனர்.
முதல் பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இதன் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கேட்டுக் கொண்டனர் ஆனால் அஜித்தோ அடுத்த அடுத்த இயக்குனருடன் கமிட்டாகி நடித்து வருவதால் வெங்கட் பிரபுவுடன் இணைய முடியாமல் போனது ஆனால் வெங்கட் பிரபு அஜித்துடன் பணியாற்ற ரொம்ப ஆசையாக இருக்கிறார் அஜித் ஒரு தடவை தலை அசைத்தால் போதும் மங்காத்தா 2 படத்தை எடுத்து விடுவேன் என கூறி வருகிறார்.
மங்காத்தா 2 திரைப்படத்தில் நிச்சயமாக விஜயையும் நடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை ஏனென்றால் ஒரு தடவை நான் விஜய்யைச் சந்தித்தேன் அப்போது அவர் மங்காத்தா படம் குறித்து பேசினார் மேலும் அஜித்தின் மங்காத்தா படத்தில் எனக்கு ஒரு சீன் கொடுத்து இருந்தால் நிச்சயம் நான் நடித்து இருப்பேன் என விஜய் சொன்னாராம்.
அதிலிருந்து மங்காத்தா 2 படம் எடுத்தால் நிச்சயம் அஜித்தும் விஜயையும் வைத்தான் எடுப்பேன் என அப்பொழுது உறுதியாக சொன்னார். அதுபோல தற்போது அஜித்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார் வெங்கட்பிரபு இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர் ஒருவர் அஜித்-விஜய் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை மங்காத்தா 2 என பெயர் வைத்து வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த பிரேம்ஜி கொல மாஸ் என பதிவிட்டுள்ளார் இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..
Phaaaaaaaaa 🔥🔥🔥 https://t.co/OfhClrWt7q
— PREMGI (@Premgiamaren) May 18, 2022