கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை வைத்து ஆண்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்த மஞ்சுளா..!

keerthi
keerthi

சமூக வலைதள பக்கத்தில் நாளுக்கு நாள் போலி கணக்குகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அந்த வகையில் போலி கணக்குகள் என்று தெரியாமல் பல்வேறு மக்கள்களும் பணத்தை இழந்து வருவது வாடிக்கையாக இருப்பது மட்டுமில்லாமல் அவை விபரீதத்திலும் முடிந்து விடுகிறது.

அந்த வகையில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை டிபியாக வைத்து பேஸ்புக் அக்கவுண்ட் ஒன்றை தொடங்கியுள்ளார் அவர் வேறு யாரும் கிடையாது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மஞ்சுளா என்ற ஒரு பெண் இந்த அக்கவுண்டுக்கு பல ஆண்கள் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பி உள்ளார்கள்.

அதில் பரசுராமன் என்ற ஒரு நபரும் இந்த அக்கவுண்டுக்கு பிரண்ட் ரெக்யூஸ்ட் அனுப்பி உள்ளார் மேலும் அந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த பெண் மிகவும் அழகாக இருப்பதை பார்த்த நமது பரசுராமன் உடனடியாக அதனை ரசித்தாரே தவிர அதில் இருப்பது கீர்த்தி சுரேஷ் என்பதை முற்றிலுமாக மறந்து விட்டார்.

பின்னர் ஒரு அழகான பெண் நம்முடன் பழகி வருகிறார் என்பதை நினைத்து அந்த போலி அக்கவுண்ட் மீது காதல் வளர்த்துக் கொண்டார் இவ்வாறு அவருக்கு காதல் முகம் அதிகரிக்க அதிகரிக்க பல முறைகேடான செயல்களையும் செய்ய ஆரம்பித்து விட்டார்.

பரசுராமன் அவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அதுமட்டுமில்லாமல் அவர் ஹைதராபாத்தில் கட்டிடத் தொழிலாளிகளுக்கு மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார் மாதம் 30,000 சம்பளத்தில் பணியாற்றி வரும் நமது பரசுராமன் போலி அக்கவுண்ட் வைத்திருக்கும் மஞ்சுளாவுடன் வாட்ஸப் மூலம் பேசி காதலை வளர்த்துக் கொண்டார்.

keerthi-2
keerthi-2

பின்னர் நமது காதலி தான் பேசுகிறார் என்ற காரணத்தினால் மஞ்சுளா கேட்கும்போதெல்லாம் நமது பரசுராமன் அவருக்கு தேவையான பணத்தை எல்லாம் அனுப்பி வந்துள்ளார் பின்னர் மஞ்சுளா ஆசை காட்டி மோசம் செய்தது மட்டுமில்லாமல் பரசுராமனின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்ப சொல்லி அவற்றை வைத்து பிளாக்மெயில் செய்து அவரிடம் 40 லட்சம் மிரட்டி வாங்கி உள்ளார்.

இந்த பணத்தை எல்லாம் வைத்து 100 கிராம் தங்கம் கார் பைக் என எல்லா பொருட்களையும் வாங்கி குவித்த மஞ்சுளா அவர்கள் தற்பொழுது புதிதாக ஒரு வீடையும் கட்ட ஆரம்பித்துள்ளார் பின்னர் பரசுராமன் வேறு வழி இல்லாமல் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் விசாரணைப்படி மஞ்சுளா கையும் களவுமாக மாட்டியது மட்டுமில்லாமல் அவருடைய கணவர் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து மை மஞ்சுளா கைது செய்யப்பட்டது மட்டுமில்லாமல் அவர் மீது விசாரணையும் நடந்து வருகிறது. ஆனால் மஞ்சுளாவின் கணவர் தற்பொழுது தலைமறைவாக இருந்து வருகிறார்.