துணிவு படத்தின் போது அஜித்தின் ஆசையை நிறைவேற்றிய மஞ்சுவாரியர்.? என்னென்ன தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்

ajith and manjuwarrier
ajith and manjuwarrier

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “துணிவு” திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 230 கோடிக்கு மேல் வசூல் அள்ளி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் “விடாமுயற்சி”..

திரைப்படத்தில் நடிக்க அஜித் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துணிவு திரைப்படத்தில் நடந்த சம்பவத்தை பற்றி ஒரு செய்தி வெளியாகியுள்ளது. துணிவு திரைப்படத்தில் அஜித் ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்திருந்தார். அப்பொழுது அஜித் மஞ்சு வாரியரிடம் ஒரு கோரிக்கை வைத்தார்.

அதாவது 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அசல் படத்தில் தனது ஜோடியாக நடித்த நடிகை பாவனாவிடம் பேச வேண்டும் என கேட்டுள்ளார் இதை கேட்ட உடனே மஞ்சு நடிகை பாவானவுக்கு கால் செய்துள்ளார் ஆனால் கால் ரீச் ஆகவில்லை.. விஷயத்தை எப்படியே தெரிந்து கொண்ட நடிகை பாவனா..

ajith
ajith

சில நாட்கள் கழித்து சென்னை வந்துள்ளார். அஜித்தை சந்தித்தார் பிறகு மதிய உணவை சாப்பிட்டார் இதனை அஜித் பிறந்தநாள் அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து எனது வாழ்வில் மறக்க முடியாத நாள் என பதிவிட்டு இருந்தார்.

மேலும் ஒரு பேட்டியில் நடிகர் அஜித் பற்றி நடிகை  பாவனா பேசியது.. அவருடன் எப்போ நடித்த நடிகை நான்.. ஆனால் அவர் இன்னும் என்னை ஞாபகம் வைத்து என்னை நலம் விசாரித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது இந்த பண்பால் தான் இவரை அனைவரும் கொண்டாடுகின்றனர் என கூறினார்.