கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவருக்கும் மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்ற முடிந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்து ஊடகங்கள் இருக்கு முதன் முறையாக பதில் அளித்து உள்ளார்கள் அப்பொழுது தங்களுடைய ஹனிமூன் எங்கே செல்ல இருப்பதாகவும் கூறியுள்ள நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த பேட்டியில் இருவரும் தங்களுடைய காதல் ஆரம்பித்ததில் இருந்து திருமணம் செய்து வரை ஏராளமான சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகனாக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் கௌதம் கார்த்திக்.
நடிகர் கௌதம் கார்த்திக் கடல், வை ராஜா வை உள்ளிட்ட ஏராளமான ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார் இருந்தாலும் சொல்லும் அளவிற்கு சினிமாவில் இவரைப் பற்றி பேசப்படவில்லை இப்படிப்பட்ட நிலையில் இவர் தேவராட்டம் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருக்கு ஜோடியாக நடித்த மஞ்சுமா மோகன் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
அந்த நட்பு குறிப்பிட்ட காலங்கள் இருக்கு பிறகு காதலாக மாற முதலில் கௌதம் கார்த்திக் மஞ்சுமா மோகனிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். பிறகு மஞ்சுமா மோகனும் இரண்டு நாள் யோசித்து விட்டு தன்னுடைய காதலை கூறியதாக சமீப பேட்டியில் கௌதம் கார்த்திக் கூறியுள்ளார் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் பிறகு தங்களுடைய பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 28ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்தில் ஏராளமான திரை பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் குடும்பத்தினர்கள் என பலரும் பங்கு பெற்றார்கள். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு ஊடகம் ஒன்று இருக்கு பதிலளித்த நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் ஹனிமூன் குறித்து முடிவு செய்யவில்லை என்றும் கௌதம் கார்த்திக் தற்பொழுது பத்து தல படத்தின் படப்பிடிப்பு இருப்பதால் அந்த படப்பிடிப்பு முடித்த பிறகு தான் ஹனிமூன் குறித்து திட்டமிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தின் பொழுது ஹனிமூன் செல்ல திட்டமிட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.