முதல் படத்திலேயே இத்தனை கோடி சம்பளமா.? TTF வாசனுக்கு அடித்த சுக்கிர திசை

ttf-vasan
ttf-vasan

சினிமாவில் இருப்பர்கள் தவிர மற்றவர்கள் தனது திறமையை வெளிப்படுத்த பலரும் புது புது செயலிகள் மற்றும் youtube போன்றவற்றை பயன்படுத்தி வளர்கின்றனர் அந்த வகையில் டிடிஎஃப் வாசன்  பைக் ரெய்டு வீடியோவை youyube – ல் வெளியிட்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளார்.

தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறார் புதிதாக ஒரு கடையை கட்டி வருகிறார் அதோடு மட்டுமல்லாமல் டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் என்ற படத்திலும் நடிக்க உள்ளார் இந்த படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டது படத்தை  செல்அம் எழுதி, இயக்குகிறார் இந்த படத்தை தி பட்ஜெட் பிலிம் கம்பெனி மற்றும் cosmetologist டாக்டர் கவிதா பிரியதர்ஷினி இணைந்து தயாரிக்கிறார்.

இந்த படத்தில் டிடிஎஃப் வாசன் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் இணைந்து காமெடி நடிகர் கூல் சுரேஷ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு கொளஞ்சி குமார் ஒலிபதிவு செய்கிறார் ஸ்ரீதர் மாஸ்டர் தான் நடனம் அமைக்கிறார் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மஞ்சுவீரன் படத்திற்காக TTF வாசன் வாங்க உள்ள சம்பளம் குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது பொதுவாக நடிகர்கள் ஆரம்பத்தில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி படிப்படியாக கோடிகள் வாங்குவார்கள் ஆனால் TTF வாசன் முதல் படத்திலேயே கோடி கணக்கில் சம்பளம் வாங்க உள்ளார் என கூறப்படுகிறது.

youtube லட்ச கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்தவர் மஞ்சள் வீரன் படத்திற்காக சுமார் 1.8 கோடி வழங்கப்பட இருக்கிறதாம். விஷயத்தை கேள்விபட்ட பலரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மேலும் TTF வாசனுக்கு சுக்கர திசை அடித்து உள்ளது அதனால் முதல் படத்திலேயே 1.8 கோடி சம்பளம் வாங்குகிறார்கள் என கூறிவிட்டு இந்த செய்தியை பரப்பி வருகின்றனர்.