ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் திலகம் சிவாஜியை “ஏமாத்திய” மணிவண்ணன் – அதுக்கென்ன இப்படியா பண்றது.!

sivaji
sivaji

70, 80களில்  கொடிகட்டி  பறந்தவர் நடிகர் சிவாஜி. இவர் நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது. எந்த மாதிரியான டயலாக் கொடுத்தாலும் ஈசியாக பேசி நடித்து விடுவாராம் அந்த அளவுக்கு திறமைசாலியாக இருந்தார். இதனால் இவரை படங்களில் புக் செய்ய நடிகர், நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு காத்துக்கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் வயது   அதிகமாக  அதிகமாக டாப் ஹீரோக்களின் படங்களில் அப்பா, சித்தப்பா, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி ஒரு தடவை இயக்குனர் சித்ராவின் படமான ஜல்லிக்கட்டு படத்தில் சிவாஜி நடித்தார் இவருடன் கைகோர்த்து நடிகர் சத்யராஜ், நடிகை ராதா மணிவண்ணன் மற்றும் பலர் நடித்து வந்தனர் இந்த படத்தின் படப்பிடிப்பு வெளியூர்களில் நடத்த படக்குழு முதலில் திட்டமிட்டது.

அதன்படி சில காட்சிகளை கர்நாடகா, பெங்களூருவில் சில இடங்களிலும் நடத்தி முடித்துவிட்டு மீதமுள்ள படப்பிடிப்புகளை சென்னையில் நடத்த திட்டமிட்டது மறுநாள் காலை படபிடிப்பு என இருந்த நிலையில் சித்தராக தன்னுடைய அறையில்  சத்யராஜ், சித்ரா, மணிவண்ணன் மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சின்னதாக ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார்.

அனைவரும் பார்ட்டியை என்ஜாய் பண்ணிவிட்டு லைட்டை கூட ஆப் பண்ணாமல் அப்படியே ஆளுக்கு ஒரு மூலையில் படுத்து கொண்டனர். சிவாஜி ஷூட்டிங் என்றால் அதிகாலை ஐந்து மணிக்கு எல்லாம் எழுந்து ஆறு மணிக்கு தயாராகி விடுவாராம் அன்றைக்கும் அதிகாலை தயாராகி விட்டது வெளியே வந்துள்ளார் மற்றவர்கள் அறையில் லைட் எரிந்ததால் எல்லோரும் ரெடியாகுகிறார்கள் என நினைத்துக் கொண்டு சிவாஜி என்ன பண்ணுகிறீர்கள் என கேட்டாராம்.

சிவாஜியின் குரலை கேட்ட மணிவண்ணன் உடனடியாக எழுந்து புத்திசாலித்தனமாக யோசித்து ஒரு சூட்கேஷை கையில் எடுத்து வெளியே வருகிற மாதிரி வர அவரை பார்த்ததும் ஓகே ரெடியாகிவிட்டீர்களா.. சரி நான் முன்னே போகிறேன் நீங்கள் வாருங்கள் என கூறி போய்க்கொண்டிருந்தாராம் அவ்வளவுதான் அடுத்தடுத்து எல்லோரும் கிளம்பி வர படப்பிடிப்பு இரண்டு மணி நேரம் தாமதமாக தான் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் சிவாஜி சற்று அப்செட் ஆக்கிவிட்டாராம்.