தமிழ்சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் நடிகர் மணிவண்ணன், இவர் 1954 ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவர் தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் உதவியால் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
அதனைத்தொடர்ந்து மணிவண்ணன் நடிப்பு மட்டுமல்லாமல் இயக்குனராகவும் கதையாசிரியர் ஆகவும் தனது பணிகளை சினிமாவில் செய்து வந்தார், அது மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியவர், நடிகர் மணிவண்ணன் இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் அது மட்டுமில்லாமல் 50 திரைப்படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளார்.
சத்தியராஜின் கல்லூரி நண்பர் தான் மணிவண்ணன், சத்யராஜை வைத்து இதுவரை 25 திரைப்படங்களுக்கு மேல் எடுத்துள்ளார், ரஜினி மற்றும் கமல் ஆகியோருடன் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார், நடிகர் மணிவண்ணன் கடைசியாக சத்யராஜ் அமைதிப்படை இரண்டாம் பாகமாக நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ என்ற படத்தை வெளியிட்டார்.
மணிவண்ணன் செங்கமலம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு ரகுவண்ணன் என்ற மகனும் ஜோதி என்ற மகளும் இருக்கிறார்கள், தன்னுடைய மகனை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார் மணிவண்ணன்.
பின்பு 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் ஆனால் சில நாட்களிலேயே மரணமடைந்தார் மணிவண்ணன், இவரின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் மனைவி செங்கமலம் உணவு அருந்தாமல் அடுத்த இரண்டு மாதங்களிலேயே இறந்துவிட்டார்.
செங்கமலம் மணிவண்ணனுக்கு மனைவி மட்டுமல்லாமல் தாயாகவும் இருந்து பார்த்துக் கொண்டார் இதனை சத்யராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் வருந்திக் கூறினார், மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் ஸ்டெபி என்ற சினிமா பிரபலங்களுடன் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.