வளர்த்துவிட்ட மணிரத்தினம் அழைத்தும் முடியாது என முட்டுக்கட்டை போட்ட ஸ்டைலிஷ் வில்லன்.! இப்போ நீ வாழுற வாழ்க்கை அவரு கொடுத்ததுப்பா…

maniratnam
maniratnam

Maniratnam: மணிரத்தினம் திரைப்படத்தில் நடிப்பதற்கு பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஆர்வமாக இருக்கிறார்கள் அதற்கு காரணம். மணிரத்தினம் சினிமாவிற்கு தரமான திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அதிலும் சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றார். இந்த நிலையில் பெரிய பெரிய நடிகர்கள் மற்றும் நட்சத்திரங்கள் மணிரத்தினம் திரைப்படத்தில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அப்படி இருக்கும் நிலையில் மணிரத்தினமே தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க கூப்பிட்டும் மறுத்துள்ளார் பணக்கார அப்பா. ஆனால் அவர் அழைத்தது அவருடைய மகனை தான் அதற்கும் முட்டுக்கட்டை போட்டு உள்ளார் வில்லன் நடிகர் அவர் வேறு யாரும் கிடையாது அரவிந்த்சாமி தான்.

அரவிந்த்சாமி சினிமாவில் உயர்ந்து நிற்பதற்கு காரணம் மணிரத்தினம் தான் மணிரத்தினதாள் தான் இன்று பணக்கார தந்தையாக வளர்ந்து நிற்கிறார். ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்து வந்த அரவிந்த்சாமி பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார் இவர் தனி ஒருவன் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த ஜெயம் ரவி அவர்களையே ஓரங்கட்டி விட்டார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு வில்லன் கதாபாத்திரம் மட்டுமே அமைந்து கொண்டிருக்கிறது அரவிந்த்சாமி மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியாகிய ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். ஒரு காலகட்டத்தில் அரவிந்த்சாமி போல் மாப்பிள்ளை வேண்டும் என பல பெண்கள் ஏங்கியதுண்டு அந்த அளவு அழகில் ஜொலித்துக் கொண்டிருந்தார்.

தற்பொழுது இவர் தனி ஒருவன் திரைப்படத்தில் சித்தார்த் அபிமன்யு என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அப்படி இருக்கும் நிலையில் அரவிந்த்சாமியின் மகன் பிசினஸ் மேக்னட் ஆக வேண்டும் என்று அரவிந்த்சாமி ஆசைப்படுகிறாராம் ஆனால் மணிரத்தினம் அவரை சினிமாவிற்குள் ஹீரோவாக நடிக்க வைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சினிமாவிற்கு வந்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளாராம் ஆனால் அரவிந்த்சாமி அதெல்லாம் வேண்டவே வேண்டாம் என்பது போல் கூறிவிட்டாராம். அரவிந்த்சாமி மகனை எப்படியாவது ஹீரோவாக மாற்ற வேண்டும் என மணிரத்தினம் எவ்வளவு முயற்சி செய்தும் அரவிந்த்சாமி அதற்கும் மறுப்பு தெரிவித்துள்ளார். அதற்கு காரணம் தன் மகன் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம்.

சினிமாவில் தான் ஒரு நடிகனாக இருந்தாலும் இந்த துறைக்கு தனது மகனை அனுப்ப மனமில்லாமல் இருந்து வருகிறார்.