தற்பொழுது பிரம்மாண்டமாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தினை பற்றி ஒவ்வொரு நாளும் புது புது அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. மேலும் ரசிகர்களும் மிகவும் ஆர்வமாக இந்த திரைப்படத்தின் ரிலீசாக காத்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தினை லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
மேலும் இந்த திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது அதோடு மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் தான் தற்பொழுது வெளியாக இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள ஐந்து மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் புரொடக்ஷன் பணிகளை மிகவும் தீவிரமாக பட குழுவினர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நில்லையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த பொன்னி நதி என்ற பாடலும் டீசரும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சோழா சோழா என்ற இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பாடலை ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைக்க, இளங்கோ கிருஷ்ணன் பாடல் வரிகளில் சத்திய பிரகாஷ், வி எம் மகாலிங்கம் மற்றும் நகல் அபியரங்கர் ஆகியவர்கள் பாடியுள்ளனர்.பொன்னி நதி பாடல் வெளியாகி வந்திய தேவனின் பெருமைகளை கூறிய நிலையில் தற்பொழுது சோழ சோழ பாடல் கரிகால சோழனின் பெருமையை கூறுகிறது.
மேலும் சற்றுமுன் வெளியாகிய இந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி,ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், நிழல்கள் ரவி, மோகன் ராமன்,பாலாஜி சக்திவேல் ஆகியோர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க லைப் நிறுவனம் தயாரிப்பில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இயக்கி உள்ளது.