Anchor Manimegalai play games with village youngsters: நடிகர் நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது அதுபோல சின்னத்திரையில் பணியாற்றிவரும் தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் உண்டு என அனைவரும் அறிந்ததே. மணிமேகலை ஆரம்ப காலகட்டத்தில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். இதனை தொடர்ந்து அவர் பல்வேறு ரியாலிட்டி ஷோ மற்றும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பின் நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்தை குடும்பத்தார்கள் ஏற்றுக்கொள்ளாததால் இவர்கள் இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிக்காக வெளியூர் சென்ற சிலர் வீடு திரும்ப முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தொகுப்பாளினி மணிமேகலையும் வெளியூர் சென்று வீடு திரும்ப முடியாமல் கிராமத்தில் சிக்கிக் கொண்டார். ஆனால் கிராமத்தில் இருந்து கொண்டு அவர் சமைப்பது, டீ போடுவது, முறுக்கு சுடுவது, விளையாடுவது, நடனமாடுவது, ரசிகர்களுடன் லைவில் பேசுவது என அனைத்து வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமில்லமால் அங்குள்ள சிறுவர்களுடன் சேர்ந்து பம்பரம் விடுவது, தாயம், கல்லாங்காய் விளையாடுவது அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டார். எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் இருக்கும் அவரது குணத்தை பார்த்து அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அவர்கள் விளையாடும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவலாகி கொண்டிருக்கிறது.
இதோ அந்த வீடியோ.
#manimegalai #Anchor pic.twitter.com/UuLqwOaa0Z
— Tamil360Newz (@tamil360newz) April 16, 2020