இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மணிகண்டன் வாங்கிய முழு சம்பளம்.. எவ்வளவு தெரியுமா.?

bigg-boss-6
bigg-boss-6

விஜய் டிவியில் 70 நாட்களைக் கடந்து பிக் பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒவ்வொரு வார எலிமினேஷனிலும் ஒரு ஒரு போட்டியாளர் வெளியேறி வந்தனர் அந்த வகையில் யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக சென்ற வாரம் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் அமுதவாணன், விக்ரமன், அசீம், ஏடிகே, ரக்ஷிதா, மைனா நந்தினி, சிவின், கதிர் போன்ற எட்டு போட்டியாளர்கள் இருக்கின்றனர் இந்த வாரம் கூட பிக்பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது அதில் அனைத்து போட்டியாளர்களின் உறவினர்களும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து மகிழ்ச்சி அளித்தனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் மணிகண்டன் வெளியேறி உள்ளார். இவர் சின்னத்திரையில் அழகு, தாய் வீடு, சிவா மனசுல சக்தி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

மேலும் மணிகண்டன் அவரது மனைவியுடன் சேர்ந்து விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார். மணிகண்டன் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அடையாளங்களுடன் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த மணிகண்டன் தனது திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடி வந்தார்.

இவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்த மணிகண்டன் ஒரு நாளைக்கு 18 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரை பேசப்பட்டு உள்ளே நுழைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.