Ajith : தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வருபவர் நடிகர் அஜித்குமார். இவருடன் நடித்த நடிகர், நடிகைகள் பலரும் புகழ்ந்து பேசுகின்ற நிலையில் ஒரே ஒரு தயாரிப்பாளர் மற்றும் தொடர்ந்து அஜித்தை விமர்சித்து வருகிறார் அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தான் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் மற்றும் விஜய் பற்றி பேசியுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..
அஜித் மாபெரும் நடிகர் வாழ்க்கையில் அவர் நடிப்பார் படத்தில் நடிக்க தெரியாது சும்மா வந்து அப்படி இப்படி என தொந்தியை காட்டிவிட்டு நடிப்பார் அவ்வளவுதான். 95 காலகட்டங்களில் அவன் என்னிடம் பணம் கேட்டான் நான் கொடுத்தேன் நல்ல நடிகனாக வந்த பின்னர் எனக்கு டேட் தருகிறேன் என்றான் ஆனால் தரவே இல்லை மனிதனுக்கு வாக்கு முக்கியம் தம்பி அவன் ஜென்டில்மேன்னா உங்களை நீங்களே அப்படி சொல்லிக் கொள்ளக்கூடாது.
மரியாதையை விலை கொடுத்து வாங்க கூடாது நீ உண்மையான ஜென்டில்மேன் ஆக இருந்தால் நீ என்னை கூப்பிட்டு பேசி இருக்க வேண்டும் ஆனால் பேசவில்லை விஜயை பொறுத்தவரை அவருக்கு தன்னடக்கம் உண்டு. அவர் தான் பெரிய ஆள் என்பது கோலெல்லாம் பேச மாட்டார் லியோ படத்திற்காக இந்தியா முழுவதும் ப்ரமோஷன் செய்ய வேண்டும் என்று சொன்னால் கூட அவர் செய்வார்.
விஜய் உடன் டீல் செய்வது மிகவும் ஈஸி அவருக்கு எந்த விஷயத்தையும் பேசி புரிய வைத்துவிடலாம் அவரை பார்க்க முடியவில்லை என்று யாராவது சொல்கிறார்களா.? சிலர் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் சிலரெல்லாம் படம் நடித்ததோடு சென்று விடுகிறார்கள் ப்ரமோஷன் எல்லாம் வருவதே இல்லை..
அவனெல்லாம் பைத்தியக்காரன் ஒரு படத்தில் நடிக்கிறாய் அந்த படத்தை பட குழுவோடு சேர்ந்து ப்ரமோஷன் செய்வதைவிட உனக்கு என்ன பெரிய வேலை அப்படியெல்லாம் என்ன ஹீரோ நீ.. உன்னை படங்களுக்கு புக் செய்யக்கூடாது ரஜினி சார் கமல் சாரி ப்ரொமோஷனுக்கு வருகிறார்கள் நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா என பேசினார்.