bigg boss 7 : பிக் பாஸ் ஏழாவது சீசன் 75 நாட்களைக் கடந்து தொடர்ந்து ஓடி கொண்டிருக்கிறது 75 நாட்கள் சென்றது தெரியாத அளவிற்கு விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த அளவு இந்த சீசனில் சர்ச்சைகள் அதிகமாக இருந்து கொண்டு இருக்கிறது அதேபோல் ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியே சென்ற பிறகு இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள் என பலரும் கூறினார்கள்.
ஆனால் பிரதீப் ஆண்டனி வெளியே சென்ற பிறகும் இந்த நிகழ்ச்சியை ஆர்வமாக ரசிகர்கள் கண்டு களித்து வருகிறார்கள் இந்த நிலையில் சமீபத்தில் மிட் வீக்கில் எலிமினேட் ஆனார் அனன்யா அவரைத் தொடர்ந்து கூல் சுரேஷ் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவும் கலந்து கொண்டார் ஆனால் சமீபத்தில் தான் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
வனிதா விஜயகுமார் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார் அதேபோல் கவின் மற்றும் சாண்டி இரண்டு பேரும் வத்திக்குச்சி என தனக்கு பெயர் வைத்ததை கூறினார் அப்பொழுது பட்டப்பெயர் வச்சப்ப கமலுக்கு தெரியலையா இப்பதான் தெரியுதா இந்த சீசன்ல மட்டும் தான் பட்ட பெயர் வைக்க கூடாது என்று சொல்வது மிகப்பெரிய தவறு என்கிறார் அது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு தான் தெரியும் எவ்வளவு காரி துப்பி உள்ளார்கள் என்பது அதுமட்டுமில்லாமல் ஒவ்வொருத்தருக்கும் ஒரு பட்டப்பெயர் வைத்துள்ளார்கள் இதெல்லாம் சாதாரண விஷயம் தான் இதை கமல் பெரிய விஷயமாக பேசுவதை பார்த்தால் தான் என்ன நடக்குது என்பது யோசிக்க தோணுகிறது. அதேபோல் தெலுங்கு பிக் பாஸ் பைனல் முடிந்தது அவ்வளவு சூப்பராக நாகர்ஜுனன் அந்த நிகழ்ச்சியை கொண்டு போய் இருந்தார். ஆனால் இங்கு ஒரே ஆண்டவர் புராணமாக இருக்கிறது.
குஷி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவரா.? கடைசி நேரத்தில் வேலையை காட்டிய விஜய்
மேலும் பிக் பாஸ் வீட்டில் விக்ரம் அவரை எத்தனை பெயர் கடுமையாக திட்டினாலும் கேலி கிண்டல் செய்தாலும் பிக் பாஸ் டைட்டில் பெற விடாமுயற்சியுடன் போராடி வருகிறார். ஆனால் அதே வீட்டில் இருக்கும் ரவீனா மற்றும் மணிக்கு இது பெயிடு ஹனிமூன் தான் திருமணத்திற்கு முன்பே இப்படி ஒரு சான்ஸ் யாருக்கு கிடைக்கும் என நடிகை வனிதா பேட்டியில் கூறியுள்ளார்.