இயக்குனர் மணிரத்தினம் ஒரு வழியாக தனது கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை எடுத்தார் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள் பலரும் இந்த படத்தை போட்டி போட்டுக்கொண்டு பார்த்தனர்.
படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் நல்ல வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்தது அதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது ஒட்டுமொத்தமாக 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது. OTT மற்றும் சேட்டிலைட் உரிமம் ஓட்டிட்டு என அனைத்திலும் நல்ல காசு பார்த்தது பொன்னியின் செல்வன்.
முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்போம் அதிகரித்துள்ளது. பொன்னியின் செல்வன் 2 படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது தற்போது அந்த படத்திற்கான வேலைகளில் தான் இயக்குனர் மணிரத்தினம் களம் இறங்கி உள்ளாராம் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெற்றி பெற்றதால் இரண்டாவது பாகத்தில் இன்னும்..
சில காட்சிகளை வைக்க மணிரத்தினம் திட்டம் போட்டு இருக்கிறார். குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுவது வந்திய தேவன், அருள் மொழிவர்மன், நந்தினி ஆகிய மூவருக்கும் சற்று காட்சிகளை அதிகப்படுத்த அவர்களிடம் சந்தித்து பேசி உள்ளார். முதலில் நடிகர் கார்த்தியிடம் போய் பொன்னியின் செல்வன் 2 படத்தில் உங்களுக்கு சில காட்சிகள் அதிகப்படுத்த இருப்பதாக கூறியுள்ளார்.
ஆனால் அவரது பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்திற்காக தாடி முடி எல்லாம் வளர்க்க முடியாது எனக்கூறி மறுத்து விட்டாராம் அதே போல நடிகர் ஜெயம் ரவியுடன் பேசும் பொழுதும் அவரும் மறுக்கிருக்கிறார் கடைசியாக ஐஸ்வர்யா ராய் இடம் சந்தித்து பேசி உள்ளார் அவர் தயங்கினாலும் ஒரு வழியாக பேசி சம்மதம் வாங்கி விட்டாராம்.