பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும் மணிரத்தினம்.! சிக்குவாரா விக்ரம் – நடப்பது என்ன.?

vikram
vikram

இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து உண்மை மற்றும் நாவல்களை மையமாக வைத்து பல்வேறு  திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டு உள்ளார். இப்பொழுது கூட பொன்னியின் செல்வன் நாவலை தழுவி  பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தை எடுக்க சுமார் 500 கோடி செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், விக்ரம், ஜெயராஜ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் டீசர் மற்றும்  பாடல் வெளியீட்டு விழா போன்றவற்றில் இதில் நடித்த பெரும்பாலான நடிகர் நடிகைகள் கலந்து கொள்ளவில்லை

இதனால் ரசிகர்கள் பலரும் மணிரத்தினத்திற்கும் அந்த நடிகர்களுக்கும் இடையே பிரச்சனை எனவும், மேலும் சரியான கதாபாத்திரத்தை மணிரத்தினம் கொடுக்கவில்லை எனவும் சில வதந்திகளை கிளப்பினர். டீசர் வெளியீட்டு விழாவை தவிர்க்கத்தான் விக்ரம் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனார் எனவும் பலவற்றை கூறினர் ஆனால்  அது எல்லாம் உண்மை இல்லை என கூறப்பட்டது.

அதாவது விக்ரமுக்கு பொன்னியின் செல்வன் படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரம் வேண்டுமென மணிரத்தினம் கேட்டுள்ளார் எந்த கதாபாத்திரமும் உனக்கு பிடித்து இருக்கோ அதில் நடிகனாக கூறிவிட்டாராம் மணிரத்தினம் உடனே விக்ரம்  தனக்கு பிடித்த ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையான தெரியவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் பட குழு வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி அதை பெரிய அளவில் பிரமோஷன் செய்ய திட்டமிட்டுள்ளது இதற்கு இந்த படத்தில் நடித்த நடிகர் அனைவரும் ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு வேறு எந்த ஒரு கமிட்டாக இருக்கக் கூடாது என பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன்காக நீங்கள் ஒதுக்க வேண்டும் என மணிரத்தினம் தெரிவித்துக் கொண்டாராம்.

இதில் அவர் விக்ரம் கலந்து கொள்ள வேண்டும் என மணிரத்தினம் ரொம்ப ஆர்வம் காட்டி வருகிறாராம் இதனால் விக்ரமுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் விக்ரம் தொடர்ந்து பல்வேறு படங்களில் கமிட்டாகி நடித்து வருவதால் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வருவது கேள்விக்குறி என கூறப்படுகிறது. இருப்பினும் மணிரத்தினம் விடாமல் பிரமோஷனுக்கு படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளையும் கலந்து வேண்டுமென அனைவரிடமும் கேட்டுக் கொண்டு வருகிறாராம்.