அண்மை காலமாக தென்னிந்திய சினிமா உலகில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் தமிழில் 500 கோடி பட்ஜெட்டில் இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை இயக்கியுள்ளார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியில் உலக அளவில் வெளியாக இருக்கிறது.
அதற்கு முன்பாக மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்க பொன்னியின் செல்வன் பட குழு தொடர்ந்து போஸ்டர்களை வெளியிட்டு வந்த நிலையில் அண்மையில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது மேலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் பல டாப் பிரபலங்கள் நடித்து உள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படம் குறித்து அண்மையில் மணிரத்தினம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது பொன்னியின் செல்வன் படத்தை யார் யாரோ எடுக்க ஆசைப்பட்டனர்.
ஆனால் ஒரு வழியாக அதை நான் எடுத்துவிட்டேன் இந்த படம் எனக்கு கனவு படம். பொன்னியின் செல்வன் படத்தை இயக்க நான் இப்பொழுது முயற்சிக்கவில்லை. பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க நான் மூன்று நான்கு தடவை முயற்சி செய்தேன் கடைசியாக இப்பொழுது தான் அந்த கனவு நிஜமானது. இந்த சமயத்தில் ஒரு தகவல் இணையதள பக்கத்தில் பரவி வருகிறது.
அதாவது பொன்னியின் செல்வன் படத்தை முதலில் எடுப்பதற்காக பல்வேறு நட்சத்திர நடிகர்களை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது அந்த வகையில் அவர் யார் யார் என்பது குறித்தும் தகவல் கிடைத்துள்ளது இதோ. மகேஷ் பாபு, விக்ரம், சூர்யா, விஜய், அசின், அனுஷ்கா, பிரியங்கா சோப்ரா, விஷால் மற்றும் பலர் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது.