இந்த காட்சியில் இப்படிதான் இசை இருக்க வேண்டும்..! ஏ ஆர் ரகுமான்கே பாடம் கற்றுத்தரும் மணிரத்தினம்..!

ar raguman

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் மணிரத்தினம் இவருடைய இயக்கத்தில் பல்வேறு மெகா ஹிட் திரைப்படங்கள் வெளிவந்தது மட்டுமில்லாமல் இவர் திரை உலகில் பல்வேறு சாதனையையும் செய்துள்ளார்.

அந்த வகையில் வெகுகாலமாக தன்னுடைய கனவாக இருந்த திரைப்படம் ஒன்றை இரண்டு பாகங்களாக எடுக்க இயக்குனர் மணிரத்தினம் முடிவு செய்துள்ளார் அந்த வகையில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.  அந்த வகையில் தற்போது இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று கம்போஸ் செய்து கொண்டிருந்தார்கள்.

இயக்குனர் மணிரத்னம் அவர்கள் அந்த பாடலுக்கு உண்டான காட்சிகளை விலக்கி காட்டி கொண்டிருப்பதை இயக்குனர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் முதலில் மிக பிரம்மாண்டமான டிரம்ஸ் இசை அதிர வைக்க வேண்டும் அதன் பிறகு சக்கரவர்த்தி பொன்னியின் செல்வன் வரும் பொழுது இரண்டாவது கட்ட இசை அலை மிக பிரமாண்டமாக இருக்க வேண்டும் அதேபோல அவர் கிரீடத்தை தன்னுடைய தலையில் வைக்கும் பொழுது  மெய்சிலிர்க்கும் வகையில் இசை இருக்க வேண்டுமென மணிரத்தினம் கூறியுள்ளார்.

இவ்வாறு மணிரத்னம் அவர்கள் தன்னுடைய திரைப்பட பாடல் காட்சிக்கு விளக்கம் செய்யும் பணியை பார்த்து பல்வேறு ரசிகர்களும் ஆச்சரியமடைந்த மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.